ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்ரியு )  கவிஞர்  இரா .இரவி !  




பயம் கொள்வதில்லை 
உயரத்தில் இருந்து குதிக்க 
அருவி !

சுகம் தரும் 
சுந்தரம் தரும் 
சுற்றுலா !

மாதத்தில் ஒரு நாள் 
மிக அழகு வானம் 
பௌர்ணமி !

பறக்காமலே
பயணித்தது 
எருமை மீது காகம் !

எதிர்பாராமல் வந்தது 
இதம் தந்தது 
ஆலங்கட்டி மழை !

ரசிப்பதால்
தேய்வதில்லை 
அழகு !

மரங்களுக்கு மட்டுமல்ல 
மனிதனுக்கும் உண்டு 
இலை உதிர் காலம் !  

உரித்து தின்னாலும் 
உரிக்காமல் தின்னாலும் சுவை 
நுங்கு !

நகைச்சுவை சொல்லாமலே 
இதழ்கள் விரித்து சிரித்தன 
மலர்கள் !

மனிதருக்கு மட்டுமே உரியது சிரிப்பு 
கருத்தை மாற்றுங்கள் 
சிரிக்கின்றன மலர்கள் !

இந்தக் கற்களில் 
எது சிலையாகும் 
அறிவான் சிற்பி !

அனிச்சை செயலாய் 
காதை மூடினர் 
கருவண்டு !

சிதைக்கப்பட்டன 
சிலந்தி வலைகள் 
வீடு சுத்தம் !

கர்ப்பிணிக்கு மட்டுமல்ல 
அனைவருக்கும் பிடிக்கும் 
கோடையில் மாங்காய் !

செல்வச் செழிப்புடன் 
ஆலயங்கள் 
காவலர் குடியிருப்பில் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்