ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !
எல்லோரும் மன்னர்கள்
என்று சொல்லி வாக்கு வாங்கி
மன்னராகி விடுவார்கள் !
சாதி ஒழிப்பது கொள்கை
அதிகபட்ச சாதிக்காரருக்கு வாய்ப்பு
வேட்பாளர் தேர்வு !
அவர் செய்தார் என்பார் இவர்
இவர் செய்தார் என்பார் அவர்
ஊழல் !
அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு திண்டாட்டம்
தேர்தல் !
வாடிக்கையானது
வாக்கு வந்தபடி உளறல்
வாக்குறுதி !
ஒழியவே இல்லை
யார் வந்தபோதும்
வறுமை !
பணமுள்ள கெட்டவருக்கு முன்னுரிமை
பணமற்ற நல்லவருக்கு பின்னுரிமை
வேட்பாளர் தேர்வு !
தேன் பால் ஓடுமென்பார்கள்
வென்றதும்
ஓடி விடுவார்கள் !
யாருமில்லை நல்லவர்
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு
தேர்தல் !
இனிக்க இனிக்கப் பேச்சு
தேர்தலுக்கு முன்
வென்ற பின் வாய்ப்பூட்டு !
தேர்தலுக்கு முன் ஒன்று
தேர்தலுக்குப் பின் மற்றொன்று
கூட்டணி !
கருத்துகள்
கருத்துரையிடுக