நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நர்மதா பதிப்பகம் ,10 நானா தெரு ,பாண்டி பஜார் ,தி நகர் ,சென்னை .17.
விலை ரூபாய் 60. மின் அஞ்சல் narmadhamail@yahoo.co. in
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் தந்துள்ள அணிந்துரை மிக நன்று .இந்த நூலை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு சென்றபோது , தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கி வந்தேன் .படித்தேன் சுவைத்தேன் .சுவை தேன்.தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல நூல் .மனச் சோர்வு ,கவலை ,விரக்தி வந்தால் இந்த நூலைப் படித்தால் போதும் புத்துணர்வு பிறக்கும் .
எந்த ஒரு கதவையும் பூட்டி இருக்கிறதே என்று கவலை கொள்ளாமல் தட்டினால் திறக்கும் . "தட்டுங்கள் திறக்கப்படும் " என்பது கிறித்துவர்களின் புகழ் பெற்ற சொற்கள் .அதிலிருந்து இந்தப் பெயர் சூட்டப் பட்டுள்ளது .
ஊக்கம் தரும் ,நம்பிக்கை தரும் 23 கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கின்றன .கனவு காண்போம் ,.இலக்கே இலட்சியம் ,ஆகட்டும் ,நேரம்தான் உயரிய செல்வம் ,நேர்மறை எண்ணங்கள் .இப்படி உள்ளன .
தினமணி ஆசிரியர் திரு .வைத்தியநாதன் அவர்கள் புழு வண்ணத்துப் பூச்சி ஆகும் நிகழ்வை எழுதி அணிந்துரை தந்துள்ளார்கள் .மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர்
டி .எஸ் .கிருஷ்ண மூர்த்திஅவர்களின் அணிந்துரையும் நன்று. நர்மதா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர்.பாராட்டுக்கள் .எழுத்துக்கள் கருப்பு வண்ணம் மட்டும் இல்லாமல் நீலம் ,சிவப்பு வண்ணங்களிலும் இருப்பதால் படிக்க எளிதாக இனிமையாக உள்ளன .
நூலில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .
வெற்றி பற்றிய விளக்கம் மிக நன்று .
வெற்றி என்பது ஒவ்வொருவராலும் அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுவது .அதுவாக தற்செயலாக நிகழ்வதில்லை .
மனதில் தெளிவு ,துணிவு ,கடும் உழைப்பு ,தன்னம்பிக்கை, இலட்சியத்தின் மீது பற்று இருந்தால் வெற்றி கிடைப்பது நிச்சயம்
வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த வரிகளைக் கடைபிடித்து நடந்தால் வெற்றி பெறுவது உறுதி .
புருஷ் மன்னன் சிலந்தி வலை கட்டுவதைப் பார்த்து விட்டு தொடர்ந்து முயன்று வெற்றி பெற்ற நிகழ்வை நூலில் எழுதி உள்ளார். பல நிகழ்வுகள் ,வரலாறுகள் ,பொன்மொழிகள் யாவும் நூலில் உள்ளன .
கனவெனும் விதையை விதைத்தவர்களே சாதனை என்னும் பயிரை அறுவடை செய்கிறார்கள் .
உண்மைதான் இதைத்தான் மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்கிறார் .
வெற்றியாளர்கள் குறிக்கோள்களைப் பார்ப்பார்கள் !
தோல்வியாளர்கள் தடைகளை பார்ப்பார்கள் !
வெற்றியாளர்கள் மன நிலையை நன்கு உணர்த்தி உள்ளார் .
நேரந்தான் உயரிய செல்வம் என்ற கட்டுரையில் பொன்னைவிட மேலான நேரத்தின் அருமையை , பெருமையை நன்கு உணர்த்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
மகாகவி பாரதியாரின் அற்புத வரிகள் ,விவேகானந்தரின் தன்னம்பிக்கை வரிகள் கட்டுரைகளில் மேற்கோள் காட்டி நன்கு எழுதி உள்ளார் .உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறளை பொருத்தமான இடங்களில் சுவைபட் மேற்கோள் காட்டி உள்ளார்
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு நூல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இருப்பதால் பல்வேறு அரிய நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்தி இயம்பி எழுதி உள்ளார் .தேனீ மலர்களில் தேன் எடுப்பது போல பல்வேறு நூல்களில்எடுத்து தேன் கருத்து வழங்கி உள்ளார் .
நூல் ஆசிரியர் தில்லி இரா .வைத்தியநாதன் அவர்களுக்கு ஆன்மிக ஈடுபாடி இருக்கின்ற காரணத்தால் திருமூலர் ,இராமலிங்க அடிகளார், கிருபானந்த வாரியார் ,சுவாமி சுகபோதானந்தா இப்படி பலரின் கருத்துக்களும் நூலில் உள்ளன .
.நல்லொழுக்கமே பெரும் செல்வமாகும் !
ஒழுக்கத்தில் விழுமிய நிலையே மேலான அறம் எனப்படும் .
( நான்மணிக்கடிகை )
ஒழுக்கத்தின் மேன்மையை சிறப்பைகட்டுரையில் நன்கு உணர்த்தி உள்ளார் .
உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் .உயர் குளத்தில் பிறந்திருக்கலாம் .ஆனால் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் அவன் மதிக்கப்படுகிறான் .குலமல்ல குணம்தான் முக்கியம் ."
உயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் .உயர் குளத்தில் பிறந்திருக்கலாம் .ஆனால் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் அவன் மதிக்கப்படுகிறான் .குலமல்ல குணம்தான் முக்கியம் ."
இப்படி மனிதனை நெறிப்படுத்தும் ,பண்படுத்தும் கருதுக்கள் நூல் முழுவதும் உள்ளன .தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது . நூல் ஆசிரியர் தில்லி
இரா .வைத்தியநாதன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக