இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு !
தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
பார்த்தவர்கள் ,பழகியவர்கள் ,வாசித்தவர்கள் யாராலும் எளிதில் மறக்க முடியாத எளிமையின் சின்னம் அஞ்சல் அட்டை வழி அன்பு காட்டிய அன்னம் .தி. க. சி . என்றால் திண்ணம் ,கனிவு ,சிகரம் என்று பொருள் .சாகித்ய விருதுக்கும் பெருமை தேடித் தந்தவர் .மூத்த எழுத்தாளர் , யாரையும் காயப்படுத்தாத உயர்ந்த உள்ளம் .இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு .மாமனிதர் வல்லிக் கண்ணன் போலவே எளிமையாக வாழ்ந்தவர் .எழுத்தாளர் என்ற கர்வம் துளியும் இல்லாத மாமனிதர் .
தினமணியில் கட்டுரை , கடிதம் எழுதியவர் .வளர்ந்த கவிஞர், வளரும் கவிஞர், வளர்ந்த எழுத்தாளர்,வளரும் எழுத்தாளர் , என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் விமர்சனம் வழங்கியவர் .என் நூலுக்கும் விமர்சனம் வழங்கி இருக்கிறார் . கடித இலக்கியத்தில் இமயமாக நின்றவர் .இன்று கடிதங்களே வழக்கொழிந்து விட்டது .
"எழுத்தாளர்களுக்கு சமூக உணர்வு முக்கியம் .அது இல்லாதவர்களை நான் மதிப்பது இல்லை ".என்று சொன்னவர்.அய்யா தி .க .சி. எழுத்துக்கும் , செயலுக்கும் வேறுபாடு இன்றி உண்மையாக மகாகவி பாரதியைப் போல வாழ்ந்தவர். பலருக்கு பாடமாக வாழ்ந்த மாமனிதர் .
புதுகை தென்றல் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் அய்யா
தி .க .சி . மீது அளவற்ற அன்பு கொண்டவர் அவரை சந்திப்பதற்காகவே சென்னையில் இருந்து அடிக்கடி சென்று வருவார். சமீபத்தில் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன், தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் ஆகியோருடன் சென்று சந்தித்து வந்ததைமடுரை வந்தபோது சொல்லி மகிழ்ந்தார் .புதுகைத் தென்றல் இதழிலும் செய்தி வெளியிட்டு இருந்தார் ..
தி .க .சிவசங்கரன் அவர்கள் நடமாடும் நூலகம் .அவ்வளவு அறிவு நினைவாற்றல் மிக்கவர் .படிக்காத நூல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாகுபாடு இன்றி அனைத்து நூல்களையும் படித்த சிந்தனை சிற்பி . அவர் இறந்த செய்தி அறிந்ததும் . சிங்கள இன வெறியர்களால் யாழ் நூலகம் எரிக்கப் பட்ட கொடுமை என் நினைவிற்கு வந்தது .
.
அய்யா தி .க .சி . மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தினர் மட்டுமல்ல புதுகை மு .தருமராசன் உள்ளிட்ட இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அய்யா தி .க .சி . மீது அளவற்ற அன்பு கொண்ட குடும்பத்தினர் மட்டுமல்ல புதுகை மு .தருமராசன் உள்ளிட்ட இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக