ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@ gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
மதிப்பிற்குரிய கவிஞர் இரா .இரவி அவர்களின் ஆயிரம் ஹைக்கூ புத்தகத்தை படித்த எனக்கு விழியுலகத்திற்குள் வெளியுலகம் அனைத்தையும் கண்டு விட்ட உணர்வு மேலோங்கியது .
சொத்துக்களைவிட
சிறந்தவர்கள்
நண்பர்கள் !
இந்த வரிகள் இரா .இரவி அவர்களை உலகத்திற்கு காட்டும் முகவரிகள் .
சும்மாயிருப்பதாய் அறிமுகம்
அனைத்து வேலைகளையும்
செய்யும் அம்மா !
இதில் அனைத்துத் தாய்மார்களின் ஆதரவைப் பெற்றுவிடுவார். அத்தனை யதார்த்தமான உண்மை .
ஒருவரின் பிரதிநிதியாக மட்டும் இவர் எழுதவில்லை .உலகில் ஒவ்வொருவருக்கும் தன்னை பிரதிநிதியாக பிரதிபலித்து இருக்கிறார்.
வள்ளுவரை வாசுகியின் கணவராகவும் வாசகர்களின் கண்ணாகவும் பேசியிருப்பது இதுவரை எவரும் சொல்லாத தனி நடை அறிவிப்பு .
நீளம் சக்கரமானது
தொட்டால் சுருண்டது
ரயில் பூச்சி !
புகைபிடிக்கின்றது
மலை
பனி மூட்டம் !
என்ன அழகான ரசனை ! ஓர் கவிஞனின் ரசனைதான் மொழிக்கு அழகு சேர்க்கும் என்பதை உணர்த்தியது .
ஆயிரம் இருக்கிறது ! இன்னும் 330 எங்கே ?
இது மூன்றுவரி இரவிக்குறள் !
ஆயிரம் அழகு ! அதில் இயற்கைச் சித்தரிப்பு பகுதியின் கற்பனை கலப்பு இயற்கைக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது .
தாஜ்மகாலைப் பார்த்து சாதாரண தரை எதை வெளிப்படுத்த முடியும் ?
வியப்பைத் தவிர !
கவிஞர் இரா .இரவி எனும் ஆல மரத்திற்கு உலகளவில் விழுதும் விருதும் கிடைக்க வேண்டிக் கொள்ளும் அருகம் புல்!
கருத்துகள்
கருத்துரையிடுக