ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
தாலாட்டியது
குளத்து நீரை
தென்றல் !
தென்றல் !
பயன் அதிகம்
தங்கத்தை விட
இரும்பு !
துன்பங்கள் தொடர்கதை
இன்பங்கள் சிறுகதை
ஏழைகள் !
வருவதில்லை யாரும்
வருத்தத்தில்
வற்றிய குளம் !
குரங்கின் கையில்
பூ மாலை
குடிகாரக் கணவன் !
இயந்திரமாகிவிட்ட
மனிதன் வாக்களிக்க
இயந்திரம் !
படைப்பதை விட
பூப்பதுதான்
நல்ல கவிதை !
நினைவூட்டியது பௌர்ணமி
அம்மா தந்த
வெள்ளையப்பம் !
நம்பமுடியவில்லை
ஆனால் உண்மை
ஆடு விழுங்கும் பாம்பு !
வெண்மையின்
விளம்பரத் தூதுவர்
கொக்கு !
கல்லறையின் உள்ளறையில்
நிரந்தரத் தூக்கம்
ஆடியவர் !
கண்களில் மின்சாரமுண்டு
கண்டுபிடியுங்கள் !
கவனக்குறைவு
சிக்கியது சிறு பூச்சி
சிலந்தியின் வலையில் !
முகம் பார்க்க
முடியவில்லை நிலா
வறண்ட ஆறு !
மார்கழி மாதம்
வருந்தியது மலர்
வைத்தனர் சாணியில் !
.
கருத்துகள்
கருத்துரையிடுக