கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா

கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழக அரசின் பாரதியார் விருது பெற்றமைக்கு இனிய நண்பர்  கலைமாமணி 
கு .ஞானசம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

15.3.2014  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கப் பேரவை அரங்கு வாசலில் நின்று விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்
அழைப்பிதழில் குறிப்பிட்ட அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர். 

முது முனைவர் வெ.இறையன்பு அவர்களின் சிறப்புரை அனைவரையும் கவர்ந்தது . நகைச்சுவை பற்றி விரிவான விளக்கம் தந்து . சேக்க்ஷ்பியர்  நகைச்சுவை உணர்வு பற்றி குறிப்பிட்டு ,பல அரிய தகவல்கள் தந்து சிறப்புரையாற்றினார் 

பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டினேன் .
உடன்  கவிஞர் ஞா. சந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்  
 
கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்களின் ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி .சொன்னார் .மதுரை விமான நிலையத்தில் உதவியதை நினைவு கூர்ந்து என் பெயரையும்  குறிப்பிட்டு நன்றி கூறினார் .

விழா கோலாகலமாக நடந்தது .விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவும் வழங்கினர் .
.
புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக்  கலைஞர் சோமு 
கை வண்ணத்தில்

கருத்துகள்