மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். 
ஒருங்கினைப்பாளார் 
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள்   பாண்டியன் ,மதி வாழ்த்துரை வழங்கினார்கள்.  

  திண்டுக்கல்  புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி தமிழாசிரியர் அ.சந்திர சேகர் அவர்கள் " வானமே எல்லை" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார்.  மேரி கியூரி ,எடிசன் ஆப்ரகாம் லிங்கன் ,அப்துல் கலாம் உள்ளிட்ட பல வெற்றியாளர்களின் சாதனை வரலாறு சொல்லி , பல்வேறு பயனுள்ள தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார் . தன்னம்பிக்கை பற்றி பல அறிஞர்கள் சொன்ன வாசகங்கள் வரிசையாக சொன்னார்.

திரு தினேஷ் நன்றி கூறினார் .கார்த்திகேயன் மற்றும் சிபி கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட  மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
.

கருத்துகள்