உலக சிறுநீரக தினம் ! கவிஞர் இரா .இரவி !

உலக சிறுநீரக தினம் !  கவிஞர் இரா .இரவி !

அவரை விதை வடிவில் உள்ள மனித விதை !
அவ்விதை பழுதானால் மனிதனுக்கு வதை !

உடலின் கழிவை அகற்றுவது சிறுநீரகம் !
உடலின் நலம் காப்பது சிறுநீரகம் !

உணவில் அதிக உப்பு நலக்கேடு !
உணவில் அதிக காரமும் தீங்கு !

அளவோடு இருந்தால் அனைத்திலும் நலம் !
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு !

உணவு பழக்கம் சீராக  இருந்தால் சிறப்பு !
உணவு பழக்கம் சீரின்றி  இருந்தால் சிதைப்பு!

குடிப்பழக்கம் சிறுநீரகத்தைச்  சேதப்படுத்தும் !
புகைபிடித்தலும் சிறுநீரகத்தைச்  சேதப்படுத்தும் !

நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல !
நீரின்றி அமையாது உடல் நலம் உணர்க  !

சர்க்கரை அளவில் இருப்பது அழகு !
சர்க்கரை அதிகமானால் பாதிப்பு !

இரத்தக்கொதிப்பு அளவில் இருக்கட்டும் !
இரத்தக்கொதிப்பு அதிகமானால் பாதிப்பு !

உடல் நலம் பேணினால் சிறுநீரகம் சிறக்கும் !
உடல் நலம் பேணா விடில் சிறுநீரகம் சிதையும் !

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு சிறுநீரகம் !
உறவுக்கோ யாருக்கோ ஒன்று தரலாம் !

இரண்டில் ஒன்று தந்தவர் அஞ்ச வேண்டாம் !
இனிதே நலமாய் நன்றே வாழலாம் !

மூளைச்சாவு உடல்தானம் என்றால் !
இருவருக்கு வழங்கலாம் சிறுநீரகம் !

சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு தேவை அன்பு !
சிறிதும் யோசிக்காமல் மனம் நோகமல் நட !

கருத்துகள்