மனம் ஒரு மர்ம தேசம் ! எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மனம் ஒரு  மர்ம தேசம் !

எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !


நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

திருமகள் நிலையம் சுகான்ஸ்  அபார்ட்மெண்ட் ,
ப .எ .28, பு .எ .13.சிவப்பிரகாசம் சாலை ,தியாகராயர் நகர்,சென்னை .600017.விலை ரூபாய் 90

எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பழுத்த ஆத்திகர். நான் ஒரு பழுத்த நாத்திகர் .கொள்கை வேறுபாடு இருந்தபோதும் .பெரியார் ராஜாஜிபோல எங்களுக்குள்  நட்பு உண்டு .என்னுடைய ஆயிரம் ஹைக்கூ   நூலிற்கு அவர் உடன் விமர்சனம் அனுப்பினார் .புதுகைத் தென்றல் இதழில் பிரசுரமானது .அவரது இல்லம் சென்றபோது இந்த நூலை கையொப்பமிட்டு என்னிடம் வழங்கினார் .நான் விமர்சனம் எழுதி உள்ளேன் .

மர்மதேசம் என்ற தொலைக்காட்சித் தொடர் முலம் புகழ் பெற்ற இனிய நண்பர்   எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் உளவியல் ஆய்வுக் கட்டுரை போல மனம் ஒரு  மர்ம தேசம் நூல் எழுதி உள்ளார் .

மனம் ஒரு குரங்கு என்பார்கள் , மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் .என்பார்கள்  ,மனமே கோவில் என்பார்கள் ஆனால் இவர் மனம் ஒரு மர்ம தேசம் என்கிறார். உண்மைதான் சிலரது மனம் புரிந்து கொள்ள முடியாத மர்மமாக உள்ளது . மனிதர்கள் பல வகை உண்டு .நம் மனதைச் சிதைக்கும் மனிதர்களும் உண்டு. நாம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கைச்  செய்யும் விதமாக எழுதி உள்ளார்கள் .மனதை விட்டுட்டான் என்பார்கள்.   அதுபோல மனதை விட்டு விடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக உளவியல் சிந்தனைக் கட்டுரையாக வடித்துள்ளார் பாராட்டுக்கள் . மனப்பயிற்சி தரும் நல்ல நூல் .

" ஒரு பத்து நிமிடம் இந்த மனிதரோடு ஒருவர் இருந்தால் போதும் நமது மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏராளமான குப்பைகளை அவர் போட்டு விட்டு பொய் விட்டதை அவர்  பிறகே உணர முடியும்."
 உண்மைதான் இப்படிப் பட்ட மனிதர்களை சந்தித்த அனுபவம் எல்லோருக்கும் உண்டு . நாம் அந்த குப்பைகளை  அப்புறப்படுத்தி விட்டால் நம் மனம் சுத்தமாகி விடும்.அவர் சொன்ன குப்பையை சுத்தமாக மறப்பது நன்மை .

எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதும் நேரம்தான் அதிகம் என்று நினைத்து இருந்தேன் .ஆனால் எழுதும் நேரத்தை விட படிக்கும் நேரம் அதிகம் என்பதை உணர்ந்தேன் .பல்வேறு அரிய நூல்கள் படித்து அதில் உள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதி உள்ளார்கள் .தகவல் சுரங்கமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள் .புத்தர் கதை எழுதி உள்ளார் .கேள்வி பதில் பாணியில் அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதி உள்ளார் .மிக நல்ல நடை.  உரக்க சிந்தித்து உரத்த சிந்தனையாக எழுதி உள்ள நூல் .

திருவள்ளுவரின் முயற்சி திருவினையாக்கும் என்பதை வழி மொழிந்து எழுதிய வரிகள் நன்று .வாழ்வியல் சிந்தனை விதைக்கும் வைர வரிகள் மிக நன்று 

" நீ விரும்பும் ஒன்று விரும்பிய உடனேயே  கிடைக்கா விட்டால் நீ வருத்தப்பட கூடாதாம் .எந்த ஒன்றும் உனக்கு நினைத்தவுடன் கிடைத்து விட்டால் அது நீண்ட நாள் உன்னுடன் இருக்காதாம். எத்தனைக் கெத்தனை அதிக முயற்சிகளில் ஒன்று கிடைக்கிறதோ அது உன் மரணம் வரை உன்னிடம் இருக்குமாம் .எனவே அப்போது நீ வருந்தாமல் திரும்ப முயற்சி செய்யச் சொன்னார் ." 

இந்த வரிகளை நாம் உள்வாங்கிக் கொண்டால் ஏமாற்றத்திற்காக வருந்த மாட்டோம் ..சிறுகதைகள் மூலம் அறிவார்ந்த நல்ல கருத்துக்களை விதையாக விதைத்து உள்ளார் .வாசகரை நெறிபடுத்தும் நூல் .

  "தான் வேறு மற்றவர்கள் வேறு என்று  நினைப்பவர்களும் ,தன்னையறியாதவர்களும் அறிய முடியாதவர்களும் எப்பொழுதும் தவறாகவே நடந்து கொள்வார்கள் ." என்று கதையால் உணத்துகின்றார்.தன்னைப் போலவே பிறரை நேசி என்பதை கற்பிக்கிறார் .

கவியரசு கண்ணதாசன் அவர்களின் வைர வரிகளை வைத்து வடித்த கட்டுரை  மிக நன்று  .

எங்கே போய்விடும் காலம் 
அது என்னையும் வாழ வைக்கும் 
நீ இதயத்தை திறந்து வைத்தால் 
அது உன்னையும் வாழ வைக்கும் !

இந்த வரிகளைப் படித்தபோது காவியக் கவிஞர் வாலி திரைத்துறையில் முயன்று தோற்று சோர்ந்து சொந்த ஊர் பயணப்பட நினைக்கும் போது ,கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலான மயக்கமா ! கலக்கமா ! மனதிலே குழப்பமா !உனக்கும் கீழே உள்ளவர் கோடி .என்ற வரிகளை கேட்டு சொந்த ஊர் செல்லும்   திட்டம் 
கைவிட்டு திரும்பவும் திரைத்துறையில் முயன்ற் வென்று சாதித்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

இந்த நூல் படிக்கும்போதே படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு நினைவுகளை மலர்விக்கும் விதமாக நூல் உள்ளது .நம் மனதை நாம் சரியாக புரிந்து கொள்ளாவிடில் மனம் ஒரு மர்மதேசம்தான் .புரிந்து கொண்டால் இன்பதேசம்தான்என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

இனிய நண்பர்  எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர் ராஜன் அவர்களின் மற்றொமொரு ஆளுமையை எழுத்தாற்றலை பறை சாற்றும் விதமாக உள்ளது .பாராட்டுக்கள் .கதை   நாவல் எழுதுவதை குறைத்துக்  கொண்டு  இதுபோன்ற தன்னமபிக்கை விதைக்கும் வாழ்வியல் கருத்துக்கள் விதைக்கும் நூல்கள் தொடர்ந்து எழுதிட முன் வர வேண்டும் 

கருத்துகள்