எழுத்தாளர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ஜப்பான் ஹைக்கூ பற்றி .

எழுத்தாளர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ஜப்பான் ஹைக்கூ பற்றி .

அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஹைக்கூவின்  பிறப்பிடம் ஜப்பான் எனப் பேசப்படுகிறது.


அந்த ஜப்பானில் ஏழு நாட்கள் தங்கியிருந்தது அருமையாக அனுபவம் ;.அதுவும் ....
ஜப்பானிய  ஹைக்கூ கவிஞர் ஒருவர் பெயர்  கவிஞர் Kyoshi Takahama. , நீரோடை அருகில் , ஒரு பாறையில்    எழுதிய ஜப்பானியக்  கையெழுத்தில்  அவரது கவிதையைப்  பார்த்ததும் படம் எடுத்துக் கொண்டதும் அருமையான நிகழ்ச்சி !

கவிதையை எங்களது ஜப்பானிய  வழிகாட்டி அவருக்குத்   தெரிந்த அளவு  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது; தமிழில் எனக்குப் புரிந்த அளவு....................இதோ...

"வசந்தத்தின் போது நீரில் வாத்துக்கள் உல்லாசமாக!
 கோடையின் போது  
வறண்டு மணல் படுகையாக! "

Kyoshi Takahama.
அருமையான ஒரு மாலைப் பொழுதாக அந்த நாள் எனக்குள் மகிழ்ச்சியைத் தந்தது.
விஜிமா viji.masi@gmail.com

.

கருத்துகள்