இனிய நண்பர் ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

இனிய நண்பர் ஹைக்கூ கவிஞர்  மு .முருகேஷ் அவர்களுக்கு  பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்



. வந்தவாசி கவிஞர் மு.முருகேஷுக்கு

                       திருவள்ளுவர்  இலக்கிய விருது  

               வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷின் இலக்கியச் செயல்பாடுகளை பாராட்டி, சென்னையை அடுத்த அம்பத்தூரில் செயல்படும் மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு விழாவில், திருவள்ளுவர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.  

    இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் சு.மாரிமுத்து தலைமையேற்றார். கெளரவ செயலாளர் மா.உதயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
    
      முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இலக்கியப் பணிகளில் இயங்கி வரும் கவிஞர் மு.முருகேஷிற்கு திருவள்ளுவர் இலக்கிய விருதினை நீதியரசர் மூ.புகழேந்தி வழங்கினார். விழாவில், காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், க்லைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    
    கவிஞர் மு.முருகேஷ் வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளரகவும் சமூக மற்றும் கல்விப் பணிகளைச்செய்து வருகிறார்.இதுவரை 15-க்கும் மேற்பட்ட கவிதை ,கட்டுரை, விமர்சன நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

   இவரது படைப்புகளை இதுவரை 3 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்