தமிழை நினைக்காதவன் தமிழனா ? கவிஞர் இரா .இரவி !

தலைப்புத் தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ! 

தமிழை நினைக்காதவன் தமிழனா ?   கவிஞர் இரா .இரவி !

தமிழை நாளும் சிதைக்கின்றனர் ஊடகத்தில் 
தமிழை நினைக்காதவன் தமிழனா ?  சிந்திப்பாய் !

தமிழின் பெருமை தரணி அறிந்துள்ளது !
தமிழின் அருமை தமிழன் அறியவில்லை !

பேசும் சொற்களில் பெரும்பகுதி ஆங்கிலம் !
பேச்சில் நல்ல தமிழ் காணமல் போனது !

இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம் !
இனிய தமிழின் நிலை என்னாகும்  சிந்திப்பீர் !     

உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
உயர்மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !

நல்ல தமிழ் பேசினால் கேலி பேசாதீர்கள் !
நல்ல தமிழ் பேசி அனைவரும் முயலுங்கள் !

ஆடு மாடு உலக உயிரினங்கள் யாவும் !
அம்மா என்று அழகு தமிழில் ஒலிக்கின்றன !

தமிழன் மட்டும்தான் தாய்மொழி தமிழ் மறந்து !
தமிங்கிலம் பேசித் தமிழை சிதைக்கின்றான் !

மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் 1 
மம்மி என்று அழைப்பது  மடமை உணர்ந்திடு !

அப்பா என்று அழைப்பது தான் அன்பு !
டாடி என்பது தமிழ் அல்ல நீ  நம்பு !

பெரியப்பா சித்தப்பா மாமா என்று !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

பெரிய ஆங்கிலத்தில் அங்கிள் என்ற !
பதத்தில்  ஒற்றைச் சொல் மட்டுமே  உண்டு !

பெரியம்மா சின்னம்மா அத்தை அண்ணி  என்று !
பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

உலக மொழி என்று சொல்லும் ஆங்கிலத்தில் 
ஒற்றைச் சொல் ஆண்ட்டி  மட்டுமே  உண்டு !

அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் !
ஆங்கிலேயரும் புகழும் மொழி தமிழ் !

முப்பாலை உலகிற்கு தந்த மொழி தமிழ் !
முத்தமிழை உலகிற்கு தந்த மொழி தமிழ் !

தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர் !
தாயினும் உயர்ந்தது தமிழ் உணர்வீர் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்