பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !
உழைப்பைப் போற்றும் பொன் நாள் !
உலகம் போற்றும் நன் நாள் !
நெல் விளைந்த பூமிக்கும் !
நெல் விளைவித்த கதிரவனுக்கும் !
உழவுக்குத் துணை புரிந்த மாட்டுக்கும் !
உன்னத நன்றி சொல்லும் திருநாள் !
நன்றியை இயற்கைக்கே சொல்பவன் !
நன்றியை மறக்காதவன் தமிழன் !
உலகின் முதல் மொழி தமிழ் !
உலகின் முதல் மனிதன் தமிழன் !
உலக மொழிகளின் தாய் தமிழ் !
உலக மனிதர்களின் முதல்வன் தமிழன் !
உலகிற்கு பண்பாடு பயிற்றுவித்தவன் தமிழன் !
உலகிற்கு ஒழுக்கம் ஓதியவன் தமிழன் !
உலகிற்கு விவசாயம் கற்பித்தவன் தமிழன் !
உலகிற்கு பொதுமறை தந்தவன் தமிழன் !
உலகிற்கு முன் மாதிரியானவன் தமிழன் !
உலகின் முதல் அணைக்கட்டு கட்டியவன் தமிழன் !
கட்டிடக் கலையில் நுட்பம் விதைத்தவன் தமிழன் !
கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன் !
கடல் தாண்டி சென்று வணிகம் செய்தவன் தமிழன் !
கடலில் மூழ்கி முத்து எடுத்தவன் தமிழன் !
அன்றே முப்படை அமைத்தவன் தமிழன் !
நன்றே முத்தமிழ் வளர்த்தவன் தமிழன் !
உலகில் வீரத்தை விதைத்தவன் தமிழன் !
உலகிற்கு உழைப்பை கற்பித்தவன் தமிழன் !
உலகில் பெரியகோயில் கட்டியவன் தமிழன் !
உலகில் நிகரில்லா திறமைக்காரன் தமிழன் !
உலகில் நிகரில்லா திறமைக்காரன் தமிழன் !
தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம் !
தமிழர் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக