லிபுன் ! கவிஞர் .இரா .இரவி
காதல் ஜோடி இருவர் .ஆனால் அருகே பலர் .நேரடியாகப் பேசிக் கொள்ள முடியாத சூழ்நிலை .இருவரும் அருகில் உள்ள பலருக்கும் தெரியாமலே விழிகளாலே பல பேசினார்கள் .சம்மந்தப்பட்ட இருவருக்கும் நன்கு புரிந்தது .ஆனால் அருகில் இருந்த எவருக்கும் எதுவும் புரியவில்லை .காதல் மொழி பேச இதழ்கள் வேண்டாம் .விழிகளே போதும் என்று பேசிவிட்டு இருவரும் விடைப்பெற்று சென்றனர் .காதலி என்ன சொன்னாள்.காதலன் என்ன சொன்னான் என்பது இருவர் மட்டுமே அறிந்த ரகசியம் .
பேசும் அவள் விழிகள்
காதல் மொழி நாளும் சொல்லும்
ஒய்வு எடுத்தன இதழ்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக