காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
காதல் !
மூன்றெழுத்து உணர்வு
மூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !
கர்வம் கொள்ள வைக்கும் !
கனவுகளை வளர்க்கும் !
உடல் இங்கும் எண்ணம் அங்கும் !
அடிக்கடி அலைபாயும் !
அழகு கொஞ்சம் கூடும் !
அறிவு கொஞ்சம் குறையும் !
------------------------------ ---------------
விழிகளில் நுழைந்து
மூளையில் அவள்
சிம்மாசனம் இட்டு
அமர்ந்து விடுகிறாள் !
காதல் ரசவாதம்
தொடர்கின்றது !
கற்பனைக் காவியம்
வளர்கின்றது !
------------------------------ ----------------------
முன்பு தேநீரை சூடாகக்
குடிக்காதவன் !
அவள் இருக்குமிடம்
இதயமல்ல மூளை
என்று தெரிந்ததும்
இப்போது தேநீரை
சூடாகவே குடிக்கிறேன் !
------------------------------ -----------------
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன !
யார் அதிகம் கொடுத்தது
யார் அதிகம் பெற்றது
கண்டுபிடிப்பது கடினம் !
------------------------------ -----------------
காதுகள் கேட்பதை விட
அவள் பேச்சால்
அசையும் உதடுகளை
கண்கள் இமைக்காமல்
கண்காணிப்பதால்
என்ன சொன்னாள்
என்பது புரியாமலே
தலை ஆட்டி விடுகிறேன் .
------------------------------ -------------------
காதலை அவள் உதட்டால்
உச்சரிக்காவிட்டாலும்
கண்களால் உச்சரிப்பதை
கண்கள் உணர்ந்து விடுகின்றன !
------------------------------ -----------------
மறந்து விட்டேன் அவளை என்று
உதடுகள் உச்சரித்தாலும்
மூளையின் ஒரு மூலையில்
அவள் நிரந்தரமாக !
------------------------------ ----------------
கருத்துகள்
கருத்துரையிடுக