வேண்டவே வேண்டாம் பான்பார்க் ! குட்கா !கவிஞர் இரா .இரவி !

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !கவிஞர் இரா .இரவி !

தடை செய்ப்பட்ட போதும் சிலர் 
கடைகளில் மறைத்து வைத்து விற்கின்றனர் !

மாணவர்கள் பலர் வாங்கி  மென்று 
மனநோயாளிகள் ஆகித்   தவிக்கின்றனர் !



முகேஷ் இறந்த சோகமான உண்மைக் கதை 
முக்கியமான திரையரங்குகளில்  காண்கிறோம் !

வாய் புற்றுநோயை பலர் வலிய
விலை கொடுத்து வாங்குகின்றனர் !

என்றாவது என்று தொடங்கி
என்றும் வேண்டும் என்றான்றனர் !

நன்றாக இருக்கும் பற்களை 
நாசம் செய்து கொள்கின்றனர் !

அருகில் இருக்கும் துணையும் 
அறவே வாசத்தை  வெறுக்கின்றனர் !

காலையில் தொடங்கி தொடர்ந்து 
கண் மூடித் தூங்கும் வரை மெல்லுகின்றனர் !  

சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று 
சிதைக்கும் பாக்கு உனக்கு எதற்கு ?

பான்பார்க் குட்கா மெல்லும் மனிதர்களை 
பார்ப்பவர்கள் மதிப்பதில்லை உணருங்கள் !

மதிக்கும் மனிதராக இன்றே மாறுங்கள் !
மதி மயக்கும் பாக்கை விட்டொழியுங்கள்  !

முடியாதது எதுவுமில்லை உலகில் 
முயன்றுடுங்கள்கெட்ட  பழக்கத்தை ஒழியுங்கள்! 

கருத்துகள்