லிபுன் ! கவிஞர் .இரா .இரவி


லிபுன் !    கவிஞர் .இரா .இரவி 

மலர்க்கண்காட்சி யின் உள்ளே நுழைந்தான் .பார்த்தான் பரவசம் அடைந்தான் .இத்தனை வண்ணங்களா ? வியந்தான் .இயற்கையின் இனிய கொடை எண்ணங்களை இனிமையாக்கியது.மலர்களில் எந்த மலர் சிறந்த மலர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் .
ஒவ்வொரு மலரும் ஒருவித அழகு .வாழ்நாள் குறைவு என்றாலும்,வாடாமல் சிரிக்கும் மலர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் . மலர்க்கண்காட்சி காண்பது மனதிற்கு மகிழ்ச்சி ,குளிர்ச்சி என்பதை உணர்ந்தான் .

மனதை வருடும் மலர்க்கண்காட்சி
மண்ணில் மலர்ந்த மலர்களின் ஆட்சி
பரவசம் பார்த்தவர்கள் சாட்சி

கருத்துகள்