இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !

இயற்கை நேசர் இயற்கையாகி விட்டார் ! கவிஞர் இரா .இரவி !

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் 
திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் !

இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை !
இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு !

பூச்சிக்கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் !
பூ மனதுக்காரர் எச்சரிக்கை விடுத்தார் நமக்கு !

இயற்கை உரம் இருக்க மனிதர்க்குத் தீங்கு தரும் 
செயற்கை உரம் வேண்டவே  வேண்டாம்  என்றார் !

உலகமயத்தின் தீங்கை எடுத்து இயம்பினார் !
உலகம் மதிப்பு அளிக்க வில்லை வெம்பினார் !

விவசாய நாட்டில் விளைபொருள் இறக்குமதி 
வேண்டாம் என்றார் கேட்கவில்லை ஆள்வோர் !
.
விவசாயம் செழிக்க வழிகள் பல சொன்னார் !
விபரம் தெரியாதவர்கள் ஏற்க மறுத்தனர் !

தீங்கான மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தார் !
தேவையற்றது மரபணு சோதனை என்று எதிர்த்தார் !

விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை !
வீ ணாக்கும் என்றார் பலரும் கேட்க வில்லை ! 

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை !
நாட்டை ஆள்வோரை  கவனிக்கச்  சொன்னார் !

மண்ணை நேசித்த மனிததருள் மாணிக்கம் அவர் !
மரத்தையும் நேசித்த மட்டற்ற  மாமனிதர் அவர் !

இறுதி மூச்சு உள்ளவரை இறுதி வரும் வரை !
இயற்கையைக்  காக்கப் போராடினார் !

இறுதியாக இருக்கும் இயற்கையிலும் !
உறுதியாக இருக்கும் அவர் முகம் !

அவருடைய உடலுக்குத்தான் மறைவு வந்தது !
அவருடைய உள்ளத்திற்கு மறைவு வரவில்லை !

இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வரை நினைப்போம் !
செயற்கையைக் குறைப்போம் நம்மாழ்வரை மதிப்போம் !

கருத்துகள்

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக