ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !

ஒரு சிறிய விதை
கீழும் மேலும் பயணித்தது !

கீழே வேர் விட்டு 


சத்து ஈட்டியது !

மேலே முளை விட்டு
இலைகள் விட்டு கிளைகள் விட்டு

பூக்கள் பூத்து காய்கள் காய்த்து
கனிகள் வழங்கியது !

நிற்க நிழல் தந்தது !
சுவாசிக்க காற்றும் தந்தது !

உயர் திணையான மனிதனோ !
நன்றி மறந்து பரிசளித்தான் !

கோடாரி !

கருத்துகள்