கண்ணீர் வடிக்கின்றனர் ஏழை மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !



கண்ணீர் வடிக்கின்றனர் ஏழை மீனவர்கள் !  கவிஞர்  இரா .இரவி  !

மீனவர்களின் அன்னை கடல் !
மீனவர்களின் அன்பு  கடல் !

மீனவர்களின் அட்சயப்பாத்திரம் கடல் !

மீனவர்களின் வாழ்வாதாரம் கடல் !

உயிரைப் பணயம் வைத்துப் பயணம் !
உயிரோடு திரும்பும்  உறுதி இல்லை !

இரவு பகல் பாராமல் படகுப் பயணம் !
இனிதே முடிந்தால் நன்மை பயக்கும் !

கைது செய்யக்  காத்திருக்கும் சிங்களன் !
கண் முடித்தனமாகத் தாக்கும் மடையன் !

மனிதாபிமானமற்ற விலங்காக சிங்களன் !
மனிதர்களை வதைத்திடும் எந்திரன்!

நிம்மதியாகச் சென்ற காலம் போனது !
நித்தம் தொல்லை தருகிறான் சிங்களன் !

சிங்களனின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சி !
சிலர் மீனவத் தொழிலையே விட்டு விட்டனர் !

சுறா மீன் பயத்தைவிட பெரிதானது !
சுண்டக்காய்  நாட்டு ராணுவத்தின் பயம் !

இளித்தவாயன் தமிழன் சாவதுக் கண்டு !
இந்திய ராணுவமோ ஏன் என்று கேட்காது  !

காப்பாற்ற நாதி இன்றி தட்டிக் கேட்க யாருமின்றி ! 
கண்ணீர் வடிக்கின்றனர் ஏழை மீனவர்கள் ! 


.

கருத்துகள்