தேவயானியும் இந்தியாவும் ! கவிஞர் இரா .இரவி !

தேவயானியும் இந்தியாவும் !   கவிஞர் இரா .இரவி !

இரண்டு தனி நபர்கள்  சண்டையை இரண்டு சாதிகளின் சண்டையாக்கும்  சதிகாரர்கள் போல , இரண்டு தனி நபர்கள் சண்டையை இரண்டு மதங்களின் சண்டையாக்கும் சதிகாரர்கள் போல, இரண்டு தனி நபர்கள்  சண்டையை இரண்டு நாடுகளின் சண்டையாக்கி வருகின்றனர் .

தேவயானி ஒரு குற்றவாளி .விசா மோசடி செய்துள்ளார் .பணி புரிந்த  பணியாளரின் உதியத்தை , உழைப்பை மோசடி செய்துள்ளார். பதிக்கப்பட்ட பணியாளரே நேரடியாக புகார் தந்துள்ளார் .அமெரிக்க அவர்கள் நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர் .விலங்கு மாட்டும் முன்னும் சோதனையிட்டு மாட்டுவது அவர்கள் சட்டம். சோதனை இட்ட முறைக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர் .மன்னிப்பு கேட்க சொல்வது என்ன நியாயம் .

தேவயானி குற்றமற்றவராக இருந்தால் மன்னிப்பு  கோரலாம். தேவயானியோ குற்றவாளி .ஆதர்ஷ் வீடுகள் ஊழலில் தொடர்பு பின்னணி உள்ளவர்  என்ற செய்தியும் படித்தேன் .  தேவயானி இந்தியர் என்பதற்காக குற்றம் புரிய சட்டம் உள்ளதா ? இந்திய துணைத் தூதர் என்பதால் குற்றம் புரிய சட்டம் உள்ளதா ?

தேவயானி என்ற இந்தியருக்கு நேர்ந்த அவமானத்திற்காக இப்போது பொங்கி எழுபவர்கள் .என்றைக்காவது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை சிங்கள ராணுவம் நூற்று கணக்கில் கொண்டபோதும், ஆயிரக்கணக்கில்சிறைபிடித்தபோதும் , தினந்தோறும் அப்பாவி  தமிழக மீனவர்களை சித்திரவதை செய்தபோதும் சுண்டக்காய் நாடு  இலங்கையை மன்னிப்பு கேட்க கோரியது உண்டா ?.தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த அவமானத்திற்காக ,கொலைக்காக, சிதிரவதைக்காக பொங்கி எழவில்லையே ஏன் ? தமிழக மீனவர்கள் இந்தியர்களாகத் தெரியவில்லையா ?

ஆட்சியில் இவ்வளவு நாள் ஆளும் போது பல வருடங்களாக உலகமயம் என்ற பெயரில் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை இந்தியாவை சுரண்டுவதற்கு அனுமதித்து விட்டு .அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள உலக வங்கியிடம் கை ஏந்தி கோடிகளை வட்டிக்கு கடன் வாங்கி விட்டு பின் அவர்கள் ஆணைப்படி மக்களை வாட்டியவர்கள்.  அமெரிக்கா சொல்வதை எல்லாம் செய்து வந்தவர்கள் இப்போது ஆட்சி முடியும் தருவாயில்.அமெரிக்காவை எதிர்ப்பதுபோல நாடகம் ஆடுகின்றனர்.

வல்லரசான அமெரிக்காவை மன்னிப்பு கேட்க சொல்பவர்கள். சுண்டைக்காய் நாடான இலங்கையை மன்னிப்பு கேட்க சொல்லாதது ஏன் ?


கருத்துகள்