ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !
கைக்கு எட்டியது 
வாய்க்கு எட்டவில்லை 
ஈழத் தமிழர் விடுதலை !

விதைத்தால் வளரும் 
விருட்சம் 
அன்பு !   

நம் முதுகு 
நமக்குத்  தெரியும் 
கண்ணாடியில் !

துன்பம் இன்பம் 
இரவு பகல் 
உண்டு மாற்றம் !

சொல்வதை விட 
நடந்துகாட்டுவது நன்று 
அறிவுரை !

பொறி தட்டும்போது 
பிடித்துக்கொள் 
அறிவு !

சிக்கலைத் தீர்க்கும் 
சிந்தனை 
சிந்தி !

கல்வியே சிறந்த செல்வம் 
சரி 
கல்விக்கு வேண்டும் செல்வம் !

மயங்காதவர் 
உலகில் இல்லை 
பாராட்டு !
.

வீட்டில் எலி 
வெளியில் புலி 
அரசியல்வாதிகள் !

தேர்தலுக்கு முன் ஒன்று 
தேர்தலுக்குப் பின் மற்றொன்று 
மாறும்   கூட்டணி !

முட்டாள்கள் உள்ளவரை 
அரசியல்வாதிகள் காட்டில் 
என்றும் மழை !

பொய்யர்களின் 
எதிரி 
மறதி !

கருத்துகள்