ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
கடலில் கலந்த நதியை
ஆவியாக்கிப் பிரித்தான்
ஆதவன் !
வந்தாரை வளமாக வாழவைத்து
வாழ வழியின்றி
புலம்பெயரும் தமிழன் !
நான் எழுதிய
முதல் கவிதை
அவள் பெயர் !
பிறப்பு முதல் இறப்பு வரை
மறக்க முடியா உறவு
அம்மா !
உயிரில் கலந்த
மெய்
அம்மா !
இன்று இருப்பார்
நாளை இருப்பதில்லை
அரசியல் கூட்டணி !
மக்களாட்சி என்ற பெயரில்
தொடரும் மன்னராட்சி
இந்தியா !
அரசியல்வாதிகளின்
தேசிய விளையாட்டு
ஊழல் !
அரசியல்வாதிகளின்
தேசிய கீதம்
காசு பணம் துட்டு !
தேர்ந்தெடுத்தனர்
குறைந்தபட்ச கெட்டவரை
தேர்தல் !
யார் ஆண்டாலும்
இறங்குவதில்லை
விலைவாசி !
கருத்துகள்
கருத்துரையிடுக