இலக்கியச் சோலை ஆசிரியர் கவிஞர் சோலை தமிழினியன் இதழ் பற்றி அறிமுக உரையாற்றினார் .இலக்கியச் சோலை இதழின் சிறப்பை எடுத்துக் கூறினார்கள் .விரைவில் சென்னை மற்றும் மதுரை சிறப்பிதழ் மலர இருக்கும் தகவலும் பரிமாறினார்.
கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம், காசிம் வாழ்த்துரை வழங்கினார் .
நியூமா அறக்கட்டளை இயக்குனர் திருமதி பௌலின் முன்னிலை வகித்தார் .
கவிஞர்கள் சோலை , நம்ம ஊர் கோபிநாத் , பொய்கை பா. அகத்தியன் ஆகியோர் கவிதைவாசித்தார்கள்.
திருவாளர்கள் ஆ . முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார் . இலக்கியச் சோலை வாசகர் வட்டத்தினர் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக