முகாம் தொடங்கி வைத்து சிறப்புரை ' முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் . முதன்மைச் செயலர் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .

சிங்கப்பூர்   ஆசிரியர் கழகம்  மற்றும் அமெரிக்கன் கல்லூரி இணைந்து  நடத்தும்  சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாம் !

இடம் ;அமெரிக்கன் கல்லூரி , மதுரை . நாள் 11.11.2013.
முகாம் தொடங்கி  வைத்து சிறப்புரை ' முனைவர் வெ .இறையன்பு 
இ .ஆ .ப .அவர்கள் .

முதன்மைச் செயலர் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை .
தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .

.தாய்மொழி என்பது ஆழ்மனதுடன் தொடர்புடையது .தமிழை நுகர , செமைப்படுத்த வந்துள்ளீர்கள் .தமிழில் மேன்மையும் ,புலமையும் பெறுவீர்கள் .ஒவ்வொரு நொடியையும் அடர்த்தியாகக முடியும். என்னை வளர்த்த சமுதயத்திற்கு  எதையாவது செய்ய வேண்டும் நோக்கத்தில் இங்கு வந்துள்ளேன் .அதனால்தான் மாணவர்களிடம் பேசவும் ஏற்பாடு செய்யச் சொன்னேன் .மொழி பண்பாடோடு தொடர்புடையது .கருப்பு வெள்ளை உலகம் பற்றி பேச வந்துள்ளேன் .

தெரிந்த வீட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் அடிக்கடி  SHIT  என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர் என்று பெற்றோர்கள் என்னிடம் வருத்தப்பட்டனர் .அவர்களிடம் அந்த சொல்லின் தமிழ் அர்த்தத்தை நீ சொன்னதன்  பொருள்  ( மலம் பேதியாகுதல் ) அவர்கள் சொல்லும் பொழுது எல்லாம் சொல்லச் சொன்னேன் .ஒரு வாரத்தில் SHIT  சொல்வதை விட்டு விட்டனர் .

எந்த மொழியும் அறிந்து கொள்வதில் தவறில்லை .சொந்த மொழி தாய் மொழி தமிழ்  அறியாமல் இருப்பதுதான்  தவறு .தாய் எலி குட்டி எலிகளுடன் வந்தது .அப்போது எதிர்பாராத விதமாக பூனை வந்தது. உடன்  தாய் எலி நாய் போல ஒலி  எழுப்பியது .உடன் பூனை நாய் வந்து விட்டது என்று ஓடிவிட்டது .குட்டி எலிகளை  பூனையிடம் இருந்து காப்பாற்றியது .வேறு மொழி தெரிந்து வைத்து இருப்பதும் வசதிதான் என்றது  தாய் எலி.

உதட்டிலிருந்து வருவது அந்நியமொழி உள்ளத்திலிருந்து வருவது தாய் மொழி தமிழ் மொழி .மனித மூளையை ஆராய்ந்தார்கள் .கைகளைப் பயன்படுத்தும் போது  மூளையின் எந்தப் பகுதி வேலை செய்கின்றதோ அதே பகுதி தாய்மொழி பேசும்போதும்  வேலை செய்கின்றது .தாய்  மொழி  உழைப்போடு சம்மந்தப்பட்டது.பல்வேறு விதமான வளர்சிகளுக்கு காரணம் தாய்மொழி .தாய்மொழியை  வாழ்விலிருந்து பிரிக்க முடியாது .

ஒரு மொழியை தெரிந்து கொள்ள அந்த மொழியின் பண்பாடு தெரியவேண்டும் .மொழி வல்லுநர்  டேனியல் அமேசான் காடுகளில் வாழும் மக்கள் மொழியை அறிய முயன்றார் .குறிப்பு எடுத்தார். அவர்கள் வேட்டைக்கு சென்றபோது உடன் சென்றார். காட்டுக்குள் சென்றதும் அவர்கள் வழக்கமாக பேசும் மொழி பேசவில்லை .விலங்கு மொழி ,பறவை மொழி பேசினார். காட்டு மொழி பேசினார்.காரணம்  .இவர்கள்மொழி பேசினால் மனிதர்கள் வந்து விட்டனர் என்று விலங்குகள் புரிந்து கொண்டு விடும் .

லாவோட்ஷ் சொல்வார் . மக்களை சந்தியுங்கள் .மக்களோடு பேசுங்கள் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் .மக்களின் உணர்வுகளைப்  புரிந்து கொண்டு முடிவெடுங்கள் .இது அரசு அதிகாரிக்கு ஆட்சியருக்கு எல்லோருக்கும் பொருந்தும் .

விருந்தாளி என்றால் தெரியாதவர் என்று பொருள் .உறவினர் தெரிந்தவர் எனவே அவர் விருந்தாளி அல்ல .சங்க காலத்தில் தெரியாதவ ர்களுக்கும் விருந்தோம்பல் செய்தனர் .விருந்தாளி என்ற சொல் வந்தது .வீர மரணம் அடைந்தவர்களுக்கு  நடுகல் வைத்து வழிபட்டனர் .மரத்தை சகோதரியாக  நேசித்தனர் .இவை எல்லாம் தமிழர் பண்பாடு . 

திருக்குறள் பல்வேறு நுட்பங்கள் உடையது .சேக்ஸ்பியர் கிளியோபாட்ராவை மற்ற பெண்கள் போல அல்ல சாப்பிட  சாப்பிட பசி எடுக்க வைக்கும் அழகி என்பார் .ஆனால் திருவள்ளுவர் அவளை படிக்கும் புத்தகம் என்பார் .உணவைச்  சொல்லாமல் நூலை சொல்லியவர் திருவள்ளுவர் .

மனதில்  நேசிக்க வேண்டும் .தமிழ் மொழியை நேசித்த காரணத்தால் பஞ்சாபிகாரர் காவல்துறை அதிகாரி திரு டோக்ரா  அவர்கள் தமிழில் எழுதுகிறார், பேசுகிறார் .கம்பஇராமாயணம் பற்றி பேசுகிறார் .எதை நாம்  நேசிக்கிறோமோ அதை எளிதில் கற்றுக் கொள்ள முடியும். கவிதை போல சொற்கள் வரும் .வரிகள் வற்றாத நதியாக வரும். ஆழ்மனதோடு  தொடர்புடையது .தமிழை நான் யோசித்து பேச வில்லை .ஆழ்மனதில் தமிழ் உள்ளது .

சீன மூங்கில் ,வாழை இரண்டும் நட்டான் .இரண்டுக்கும் தினமும் நீர்  
ஊற்றினான்  .வாழை வருடா வருடம் வளர்ந்தது ,குலை தந்தது. மூங்கில்  வளரவே இல்லை .மனம் தளராமல் நீர்  ஊற்றினான்  சில வருடங்கள் கழித்து 80 நாட்களில் வேகமாக வளர்ந்தது  மூங்கில் . தமிழ் மொழியும் முதலில்   கடினமாகத்  தோன்றும் ,நாக்கு தடுமாறும் ,பற்கள் தந்தி அடிக்கும் 

100 பக்கங்கள் வாசிக்க புதிய சொற்கள் தோன்றும் .கருத்துக்கள் வரும் ரசித்து .ரசித்து படிக்க வேண்டும் .காட்சிப் படுத்தி படிக்க வேண்டும். 10000 மணி நேரம் நேசிப்புடன் பயிற்சி செய்தால் மொழியில் மேதமை அடையலாம் .மகாகவி பாரதி கவிதைகள் படித்தால் சொல்லாட்சி  வரும் . 

சீன பழமொழி "  சாவதற்குள் 10000 நூல் படித்து இருக்க வேண்டும் 10000 மைல்  பயணம் செய்து இருக்க வேண்டும் .நடந்து ,தொடர் வண்டிகளில்  ,வண்டிகளில்  பயம் செய்து இருக்க வேண்டும். விமானப்   பயணம் சேராது .

எடிசன் அதிக பொருட்களுக்கு கண்டுபிடிப்பு காப்புரிமை பெற்றவர். அவரது நிறுவனத்திற்கு பணிக்கு ஆள் எடுக்க அவரே நேர்காணல் செய்வார் .உணவுக்கு அழைத்து சென்று காய்கறிச்சாறு தருவார் இவரும் எடுத்துக் கொண்டு வாயில் வைத்தவுடன் சிறிதளவு உப்பை எடுத்து போடுவார் .நேர்காணலுக்கு வந்தவரும் இவரைப் போலவே உப்பை எடுத்துப் போட்டால் உடன் அவரை அனுப்பி விடுவார். குடித்துப் பார்த்து விட்டு பிறகு  உப்பு போட்டால் தேர்வு செய்வார் .

ஆசிரியர் என்பவர் படித்ததைச் சொல்பவர் .
ஆசான் என்பவர்  நல்லதைச்  சொல்பவர் .
குரு  என்பவர்  வாழ்கையின் தாக்கத்தைச் சொல்பவர் .

ஆசிரியர் தன நன்  நடத்தையின் மூலம் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் .வைராக்கியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் 

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடினான் 80 மீட்டர் ஓடி விட்டு கால் வலிக்கிறது முடியவில்லை என்று அமரப் போனான் .அவனிடம் பயிற்சியாளர் சொன்னார் .80 மீட்டர் உன் கால்களால் ஓடி விட்டாய் மீதம் உள்ள 20 மீட்டர் மனத்தால் ஓடு என்றார் .ஓடினான் .

சங்க இலக்கியப் பாடல் கொங்கு  தேர் வாழ்க்கை ' எத்தனையோ பூக்களில் வலம்  வந்துள்ள வண்டே என் காதலியின் கூந்தலைப்  போலமணம்  வீசும் மலரை கண்டதுண்டா ?
 சிலர் இந்த பாடல் பிழை உள்ளது என்கின்றனர் .இதில் பிழை இல்லை .எல்லோருடைய  கூந்தலுக்கும் மணம்  உண்டு. எல்லோருக்கும் தலையில் ஒரு வித சுரப்பி இருப்பதால் ஒரு வித பளபளப்பும் மனமும் உண்டு . இன்னொரு கருத்து வண்டு மலரை உண்ணும் ஆனால் நுகராது .

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள் தமிழர்கள் .கருப்பு வெள்ளை என்ற இந்த உலகை .இசை ,ஓசை ,ஓவியம் ,கலை ,சிலை என வளர்த்து  வண்ணமாக்க  வேண்டியது நாம் .படித்ததைப் பகிர்வோம் .கொடுக்க கொடுக்கக்  கூடும் தமிழ் .தமிழ் பரப்ப வந்துள்ள உங்கள் அனைவருக்கும்  வாழ்த்துக்கள் .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்