எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி 
சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் !
இல்லையேல் தமிழ் வீழும் !   கவிஞர் இரா .இரவி !

' கனியிருப்பக்  காய்கவர்ந் தற்று '  திருவள்ளுவர் 
கற்கண்டாய் வடித்த குறள் இதற்கும் பொருந்தும் !

கனியாக நல்ல தமிழ் எழுத்துக்கள் இருக்கையில் !
காயான பிறமொழி எழுத்துக்கள் எதற்கு ?

பாலோடு நஞ்சு கலந்தால் பாலும் நஞ்சாகும் !
பழந்தமிழ் எழுத்தோடு வேறு கலத்தல் தீங்கு !

நம் மொழி தமிழ் எழுத்துக்கள் இருக்க !
வடமொழி எழுத்துக்கள் நமக்கு எதற்கு ?

அழகுத்ததமிழ்ச் சொற்களில் திட்டமிட்டு !
அவர்கள் வடமொழிச்  சொற்கள் கலக்கின்றனர் !

வடமொழி  எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவதை !
வேண்டுமென்றே வழக்கமாக  கொள்கின்றனர் சிலர் !

என்ன வளம் இல்லை நம் தமிழ்ச் சொற்களில் !
ஏன் கையை ஏந்த  வேண்டும் பிற சொற்களிடம் ! 

உணவில் கலப்படம் உடல் நலத்திற்குக்  கேடு !
மொழியில் கலப்படம் மொழி வளத்திற்குக்  கேடு !

அமுதமொழி உலகின் முதல்மொழி தமிழ் இருக்க !
அந்நிய மொழிச் சொற்கள் தமிழில் எதற்கு ?

தமிழ் எழுத்தால் மட்டுமே எழுதுவோம் !
தமிழ் அல்லாத எழுத்துக்களை மறப்போம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்