ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

வாயுள்ள பிள்ளை 
வழிதேடிக் காணும் 
அவசர ஊர்தி !



நம்பினோர் 
கைவிடப்பட்டார் 
நிதி நிறுவனம் !

முடிவு என்பது 
தொடக்கம்  ஆகும் 
போர் !

உள்ளங்கை 
நெல்லிக்கனி போல 
இந்தியா சிங்களன் உறவு !

கெட்ட  வேலி 
பயிரை மேயும் 
காவலர் !

சட்டியிலிருந்தால்தானே  
அகப்பையில் வரும் 
முட்டாள் !


பிறரை நேசிப்பது சரி 
முதலில் நேசி 
உன்னை !

புறங்கூறுவோனிடம்   
எச்சரிக்கை 
அரசியல்வாதி !

தவிப்பில் மகன் 
இறந்ததும் தெரிந்தது 
அப்பன் அருமை !

இயல்பாய் இரு 
இனிக்கும் 
வாழ்க்கை !

அழகு வந்துவிடாது 
அரிதாரம் பூசினால் 
நடிகை !

குறைத்துக் காட்டும் 
அழகு வயதை 
நடிகர் !
.
அழகும் 
ஒரு மலரே 
வாடும் !

பயனற்றது 
கருணை இல்லா அழகு 
பாம்பு !

நொறுங்கள் தின்றால் 
நூறு  வயதல்ல  
குறையும் வாழ்நாள் !

குறைவற்ற செல்வம் வேண்டும் 
நோயற்ற வாழ்க்கைக்கு 
மருத்துவக்  கட்டணம் ! 

இதயத்தை இயக்கிடும் 
எரிபொருள் 
நம்பிக்கை !

வேண்டும் விளம்பரம் 
பூக்கடைக்கும்  
நவீன உலகம் !

தேருக்கு அச்சாணி 
இல்லத்திற்கு 
இல்லாள் !

வரும்முன் அறிபவன் அறிவாளி 
வந்தும் அறியாதவன் 
முட்டாள் !

முட்டாளின் உணவு 
முகத்துதியே 
அரசியல் வியாதி !

அதிக பணத்தை விட 
மேலானவர்கள் 
அதிக நண்பர்கள் !

பணத்தால் முடியாததும் 
முடியும் 
நண்பனால் !

இல்லை தீக்காயம் 
நெருப்போடு விளையாடியும் 
நடனக் கலைஞன் !

கொடுத்துப் பெறுவது 
நல்லது 
மரியாதை !

தீங்கு
மது போதை மட்டுமல்ல 
புகழ் போதையும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்