ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

வேண்டாம் கொலுசு 
கூடலில் 
வண்டுகள்  !

எட்டுப்பொருத்தம் இருந்த 
இணையருக்குள் 
ஏழாம்பொருத்தம் !

தேவையற்ற சொற்கள் 
நீக்கிடப் பிறக்கும் 
ஹைக்கூ !

சமாதானமாகிவிடுங்கள் 
உணர்த்தியது 
நரை !

ஒளி தருவதாகச் சொல்லி 
 இருளையே தருகின்றனர் 
அரசியல்வாதிகள் !

நிரந்தரமில்லை 
முகவரி 
வாடகைக்கு குடியிருப்போருக்கு !

வளர் பிறையாக தனியார் பள்ளிகள் 
தேய்  பிறையாக அரசுப் பள்ளிகள் 
வேண்டாம் அமாவசை !

உணவு உடை உறைவிடம் 
இலவசம் 
நடிகர் !

ஓய்வே இல்லை 
தினமும் வேலை 
சுடுகாடு !

கவலை நீக்கி 
களிப்பைத் தரும் 
மழலையின் சிரிப்பு !

மனிதனுக்கு அழகு 
மூன்று எழுத்து முத்தாய்ப்பு 
அன்பு ! 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்