தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !
அன்பு நெறி அழித்து
வம்பு வெறி வளர்க்கின்றன
தொடர்கள் !
.
.
இரண்டு மனைவிகள்
எல்லா நாயகனுக்கும்
தொடர்கள் !
பார்த்திடச் சலிக்கின்றனர்
பார்த்த முகங்களே
தொடர்கள் !
பழி தீர்க்கும் படலம்
பயிற்றுவிககும் பள்ளி
தொடர்கள் !
நல்ல செய்தி கொஞ்சம்
கெட்ட செய்தி அதிகம்
தொடர்கள் !
விளைவித்தது
குடும்பத்தில் குழப்பம்
தொடர்கள் !
மாமியார் மருமகள்
சண்டைப் பயிற்சிக்கூடம்
தொடர்கள் !
அரைத்த மாவையே அரைத்து
அலுப்புத் தட்ட வைக்கும்
தொடர்கள் !
வழக்கொழிந்து வருகின்றன
வழக்கமான பணிகள்
தொடர்கள் !
நியாயப்படுத்தி வருகின்றன
குற்றங்களை
தொடர்கள் !
வருகிறது எரிச்சல்
பேசியதையேப் பேசுகின்றன
தொடர்கள் !
பொறுமையைச் சோதித்து
எருமையாக்கி விடுகின்றன
தொடர்கள் !
நிலை நிறுத்தி வருகின்றன
பெண்ணடிமைத்தனத்தை
தொடர்கள் !
கேப்பையில் நெய் என்கின்றன
பார்ப்போரை முட்டாளாக்குகின்றன
தொடர்கள் !
ஒழுக்கம் சிதைத்து
ஒழுங்கீனம் விதைக்கின்றன
தொடர்கள் !
பண்பாட்டைச் சீரழித்து
பலவீனம் வளர்க்கின்றன
தொடர்கள் !
நல்லவர்களையும்
கெட்டவராக்குகின்றன
தொடர்கள் !
கூசாமல் கலக்கின்றன
மனசில் மாசு
தொடர்கள் !
வீட்டிற்குள் வந்து
வேதனை தருகின்றன
தொடர்கள் !
வீரத் தமிழர்களை
வேடிக்கைத் தமிழராக்கின
தொடர்கள் !
பிஞ்சு நெஞ்சங்களில்
நஞ்சு விதைக்கின்றன
தொடர்கள் !
நெடுந்தொடர்கள் என்று
நெடுந்துன்பம் தருகின்றன
தொடர்கள் !
பெண்களை அடிமையாக்கின
ஆண்களும் அடிமையாகினர்
தொடர்கள் !
வசனத்தொல்லை மட்டுமல்ல
விளம்பரத் தொல்லை வேறு
தொடர்கள் !
தயாரிப்பவர்களுக்கு இலாபம்
பார்ப்பவர்களுக்கு நட்டம்
தொடர்கள் !
விவேகமானவர்களையும்
வீணாக்கி விடுகின்றன
தொடர்கள் !
பார்ப்பவர்களுக்குக் கற்பிக்கின்றனர்
பத்தாம் பசலித்தனம்
தொடர்கள் !
மூடநம்பிக்கைப் பரப்பி
முட்டாளாக்குகின்றன
தொடர்கள் !
போராட்டம் நடத்தி இருப்பார்
பெரியார் இருந்து இருந்தால்
தொடர்கள் !
நெஞ்சு பொறுக்கவில்லை
மனிதநேயர்களுக்கு
தொடர்கள் !
முற்றுப்புள்ளி வையுங்கள்
முன்னேறும் சமுதாயம்
தொடர்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக