மரிக்கவில்லை மனிதநேயம் ! கவிஞர் இரா .இரவி !

மரிக்கவில்லை  மனிதநேயம் !  கவிஞர் இரா .இரவி !

திருமதி பௌலின்  அவர்கள் சமூகஅறிவியல் கல்லூரியில் படித்து விட்டு உண்மையிலேயே சமூகப்  பணி செய்து வருகிறார்கள் .எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை வளர்த்து வருகிறார்கள். முதியோர்களும் உள்ளனர் .8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள் .இவரது தொண்டுக்கு துணை நின்ற இவரது தந்தை சில மாதங்களுக்கு முன் காலமாகி விட்டார்கள் .தற்போது இவரது துணைவர் துணை நின்று நடத்தி வருகிறார்கள் . 

லட்சுமி விலாஸ் வங்கியில் பணி  புரியும் நண்பர்கள் 
திரு .C.ராஜேந்திரன் ,திரு அனந்த குமார்  இருவரும் தொடர்ந்து தம்மால் முடிந்த உதவிகளை செல்லமுத்து சரஸ்வதி கல்வி அறக்கட்டளை மூலமாக  செய்து வருகிறார்கள் .சென்ற மாதம் அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு உதவினார்கள் .இந்த மாதம் யாருக்கு உதவலாம் என்று கேட்டபோது ,  சமூகஅறிவியல்கல்லூரியில்  பணியாற்றி ஒய்வு பெற்றவர் திரு .G.இராம மூர்த்தி அவர்கள், தன் மாணவி திருமதி பௌலின்  அவர்கள் நடத்தும் பெனுமா அறக்கட்டளை நடத்தும் விடுதிக்கு உதவுங்கள் என்ற சொன்னார்.

திரு .C.ராஜேந்திரன் ,திரு அனந்த குமார்  இருவரும்  உடன் அந்த விடுதிக்காக மளிகைப் பொருட்கள் ,இனிப்பு, காரம் அனைத்தும் வாங்கிக் கொண்டு மகிழுந்தில் வந்து என்னையும் ,திரு .G.இராம மூர்த்தி அவர்களையும் சிறந்த சிந்தனையாளார் ஆ .முத்துக் கிருஷ்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு விடுதிக்குசென்றனர் . அங்குள்ள சிறுவர்களையும் முதியவர்களை  சந்தித்து அன்பாக பேசி விட்டு ,  என்னுடைய கவிதை நூலையும் கொடுத்து வந்தேன் .  

இயந்திரமயமான உலகில் மனிதர்களும் மனிதநேயம் மறந்து இயந்திரமாகவே மாறி வரும் காலத்தில் ,உறவுகளே கை விடும் காலத்தில் முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் விடுதி வைத்து சிறுவர்களுக்கு கல்வியும் வழங்கி வரும் திருமதி பௌலின்  அவர்களுக்குஎல்லோரும் பாராட்டும் வாழ்த்தும் சொல்லிவிட்டு விடை பெற்று வந்தோம் .விடுதியில் உள்ள முதியவர்களும் ,காப்பக  சிறுவர்களும் திருமதி பௌலின்  அவர்களுடன் அன்பாகப் பேசுவது கண்டேன் வாழும் அன்னை தெரசா  போல அன்பு செலுத்துகிறார்கள் .
  
சாந்தி  நகர் விடுதி குடியிருப்பு பகுதியில் இருப்பதால் சில சிரமங்கள் இருப்பதால் ,  கட்டிடப்பணி   நடந்து வரும் பாலமேடு ,இராமகவுண்டன் பட்டிக்கு விடுதி சில  மாதங்களில் மாற  உள்ளது .

.உதவும் உள்ளம் உள்ளவர்கள் இவர்களுக்கு உதவலாம் .
முகவரி 

PNEUMA TRUST
5-5-8,ELANGO STREET,
SHANTHI NAGAR,
MADURAI.18
PH 0452- 2660123
CELL 9894686277.
PROJECT OFF;
ETCHIKULAM,
RAMAGOUNDANPATTI,PALAMEDU,ALANGANALLUR UNION
MADURAI.625503.

கருத்துகள்