நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
புதிய தரிசனம் பதிப்பகம் ,10/ 11 அப்துல் ரசாக் இரண்டாவது தெரு, சைதாப்பேட்டை ,சென்னை .15. தொலை பேசி 044- 4214728.
விலை ரூபாய் 200.
காந்தி தேசம் ! என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டச் சொன்னவர் தந்தை பெரியார் . காந்தி தேசம் ! என்று உலக நாடுகள் நம்மை பெருமையாகப் பார்த்த காலம் இருந்தது அன்று .ஆனால் இன்று உலக நாடுகள் நம்மை சிறுமையாக என்னும் வண்ணம் நமது அரசியல்வாதிகள் ஊழலில் செய்வதில் உலக சாதனை நிகழ்த்தி வருகிறார்கள் .இப்படி பல சிந்தனைகளை விதைத்து நூலின் தலைப்பு .
இனிய நண்பர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை அவர்களை பண்பாளர் திருமலை என்றும் பொருள் கொள்ளலாம் .இவரது எழுத்தில் இருக்கும் வேகம் பேச்சில் இருக்காது .மிகவும் மென்மையானவர் ,மேன்மையானவர், தன்மையானவர் , யாரிடமும் அதிர்ந்து பேசாதவர், பத்திரிகையாளர் என்ற கர்வம் துளியும் இல்லாதவர் .இவர் சட்டம் பயன்றவர் நினைத்து இருந்தால் பெரிய நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றி கை நிறைய ஊதியம் பெற்று சராசரியாக வாழ்ந்து இருக்க முடியும் .ஆனால் அவர் அதை விரும்பாமல் தன் எழுத்தால், உரத்த சிந்தனையால் இந்த சமுதாயத்திற்கு எதையாவது செய்தாக வேண்டும் என்ற ஏக்கத்தில் முன்னணி பத்திரிக்கைகளான தினமணி ,தினமலர் ,குமுதம் போன்றவற்றில் 33 ஆண்டுகள் பணியாற்றி விட்டு ,
தான் உணர்ந்ததை அப்படியே எழுதிட சுதந்திரம் தந்துள்ள புதிய தரிசனம் இதழில் சிறப்பு ஆசிரியராக இருந்து தனி முத்திரை பதித்து வருகிறார்கள் .புதிய தரிசனம் இதழில் எழுதிய சிந்தனை மிக்க கட்டுரைகள் 14 ஐ தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .இவற்றை மின் அஞ்சலிலும் புதிய தரிசனம் இதழிலும் தனித்தனியாக படித்து இருந்தாலும் , மொத்தமாக நூலாக படித்தபோது மனம் நெகிழ்ந்தது .
விழிப்புணர்வு விதைக்கும் கட்டுரைகள். சமுதாயத்தில் சுரண்டல் நடக்கும் மணல் கொள்ளை ,கந்து வட்டிக் கொடுமை ,பாலியல் பலாத்காரங்கள் ,கௌரவக் கொலைகள் , சிறைச்சாலையில் நடக்கும் கொலைகள் ,தற்கொலைகள் ,ஊழல்கள் என பல்வேறு கோணங்களில் நாட்டில் நடக்கும் அவலங்களை ஆதரத்துடன், புகைப்படத்துடன், புள்ளி விவரங்களுடன் , பலரின் கருத்துக்களுடன் கட்டுரை வடித்து உள்ளார் .பிரச்சனையை மட்டும் எழுதாமல் அதற்கான தீர்வுகளையும் தெளிவாக விளக்கமாக எழுதி உள்ளார் .
இந்த நூல் அறிமுக விழா மதுரையில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது .எழுத்தாளர் சிவக்குமார் நூல் விமர்சன உரை விரிவாக ஆற்றினார் .தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ம .திருமலை அவர்களை சிறப்புரையாற்றினார். அவர் குறிப்பிட்டார் இந்த நூலிற்க்காகவே நூல் ஆசிரியர்
ப .திருமலை அவகளுக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் .அவ்வளவு உழைப்பு நூலில் உள்ளன என்றார் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை அவர்கள் நாகர்கோவில் மண் வாசனையோடு மிக இயல்பாகவும் , நெகிழ்ச்சியாகவும் ஏற்புரை நிகழ்த்தினார் .கூட்டம் அரங்கு நிறைந்த காட்சியாக இருந்தது .நூல் வெளியீட்டு விழா மாநாடு போல நடந்தது .
இந்த நூலில் புதிய தரிசனம் திரு ஜெயக்குமார் அவர்களின் பதிப்புரை மிக நன்று .மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் வே .வசந்தி தேவி அவர்களின் அணிந்துரை நூலிற்கு கிடித்த வெகுமதி .அவர்களது அணிந்துரையில் இருந்து சிறு துளி உங்கள் பார்வைக்கு இதோ .
" நான் சேர்ந்த இனமாகிய ஆச்டிரியர் இனம் எதிர்காலத்தை விதைக்கும் இனம் .இந்நூலை வாசித்து கிரகித்து பயன் பெறுமா ?இக்கட்டுரைகள் வகுப்பறையில் விவாத மேடை அமைக்குமா ? இளம் உள்ள்ங்களில் அறச் சீற்றத்தை உர்வாக்குமா ? இவை நூலாசிரியரின் பொறுப்பல்ல .நம் அனைவரின் பொறுப்பு ."
ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமல்ல சமூகத்தின் மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய நூல் .இதழியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நூலை பாட நூலாக்கலாம் . ஒரு கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்று பயிற்றுவிக்கும் நூல். நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது .இவரது முதல் நூல் கொத்தடிமைகள் பற்றிய ஆய்வு நூல் . இரண்டாம் நூலான காந்தி தேசம் நாட்டு நடப்பை ஆய்வு செய்த நூல் .இந்தக்கட்டுரைகள் நான்கு சுவற்றுக்குள் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து எழுதியவை அன்று .நேரடியாக பல இடங்களுக்கு சென்று விசாரித்து பலரை நேர்முகம் கண்டு ஆராய்ந்து புள்ளி விபரங்கள் திரட்டி எழுதியவை ..உள்ளத்தைத் தொடுகின்றது .நூல் படிக்கும் வாசகரையும் அறச் சீற்றம் கொள்ள வைக்கின்றது . கட்டுரைகளில் உண்மை உள்ளது
.உண்மையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த காந்தியடிகள் படமும் பெயரும் நூலிற்கு பொருத்தம் .
முதல் கட்டுரையான " தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குமல் தவிக்கப் போகிறோம் ."
இந்தியாவில் 2020ம் ஆண்டிலேயே கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் .இந்த தண்ணீர் பற்றாக்குறையால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும் ."
இவ்வாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ராபர்ட் பிளேக் சொன்ன கருத்தை எழுதி தண்ணீர் குறித்து நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் .எல்லாக் கட்டுரைகளிலும் பிரச்சனையை மட்டும் எழுதாமல் அதற்கான தீர்வுகளையும் விரிவாக பட்டியல் இட்டு உள்ளார் .காந்தி தேசம் என்று சொல்லிக் கொண்டு இந்த மண்ணில் மரண தண்டனை தொடர்வது அழகல்ல என்பதையும் மிக அழகாக எழுதி உள்ளார் .
மொத்தத்தில் இந்த நூல் இன்று நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டிக் காட்டி காந்தி தேசமாக இல்லை .காந்தி தேசமாக மாற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான விடை தான் இந்த நூல். நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் அறச் சீற்றம். வாழ்த்துக்கள் .
.
கருத்துகள்
கருத்துரையிடுக