சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .




சங்க இலக்கிய மாண்பு !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 85.
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது  காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு குருவாகவும் ,வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருந்து வருபவர் .என்னை செதுக்கிய  சிற்பிகளில் ஒருவர் .101 என்ற எண்ணிற்கு சில சிறப்புகள்   உண்டு .தீயை அணைக்க ,நோயாளியின் உயிர்  காக்க அழைக்கும் தொலைபேசி எண் 101.திருமண வீட்டில் மொய் பணம் 100 ஆகா எழுதாமல் 101 என்று எழுதுவார்கள் .101 இல் தான் அடுத்த   நூற்றாண்டு தொடங்கும் .ஆம் இந்த நூல் 21 நூற்றாண்டிலும் தமிழின்  செழுமையைப் பறை சாற்றும் நூல். இலக்கியம்  படித்தால் வாழ்நாள் நீடிக்கும் .இந்த நூல் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் . நோய் நீக்கும் .தமிழ் மொழி மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுத்து பேச்சு என்ற இரட்டை குதிரைகளில் லாவகமாக வெற்றிப் பயணம் புரிபவர் .எலோர்ருக்கும் எழுத்து பேச்சு என்ற இரண்டும் ஒருசேர  வாய்ப்பதில்லை . 

சங்க இலக்கியம் இருக்கும் வரை  தமிழுக்கு அழிவில்லை என்று நிருபிக்கும் நூல் இது .தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் கோனார் தமிழ் உரை .சங்கத் தமிழ்ச் செய்யுள்   புரியாதவர்களுக்கு புரிய வைக்கும்  பேராசிரியர் மோகன் அவர்களின் சங்க இலக்கிய மாண்பு .தமிழ் அறிஞர் பேராசிரியர் முனைவர் கு .வெ .பாலசுப்பிர மணியன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அவர் முடிவுரையாக எழுதியுள்ள கருத்துக்கள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !

 " இந்நூலின் சிறப்புகளாகக் கீழ் வருவன சுட்டதக்கான .

1. பாட்டில் பொருளுணர்ந்த திறனாய்வு .

2. பாட்டின் திணையும்  துறையும் பாட்டோடு பொருந்த நோக்கும்            சிறப்பு .

3. பழைய உரையாசிரியர்களும் புதிய   உரையாசிரியர்களும் கூறும்        உரைகளின்      நலத்தையும் இணைத்து நோக்கிய நோக்கு .

4. இச்  செய்யுட்களைக் குறித்து அறிஞர் பலர் ஆங்காங்குக்  கூறியுள்ள  அறிய குறிப்புகளை எடுத்துக் காட்டி விளக்கல் .

5.  பாத்திரக் கூற்றை  அதன் உளவியலோடு ஒருங்கிணைத்து ப்  பார்க்கும் பார்வை ஆகியன . 

சங்க இலக்கியத்தைக் கற்பாரும் கற்பிப்பாரும்  அருகி வரும் இக்காலத்தில் பேராசிரியர் மோகன் அவ்விலக்கியத்தில் ஆழங்காற்  பட்டு ,அதன் உள்ளுறு பொருளெலாம் உணர்ந்து ,தாமுற்ற அக்கல்விப் பேற்றை உலகின் புறத் தந்துள்ளார் .ஆராய்ச்சி உலகின் பார்வைக் கேற்றது இந்நூல ."

முதற்பகுதி நற்றிணை நயம் 4 கட்டுரைகள். 

இரண்டாம் பகுதி நல்ல குறுந்தொகை    9 கட்டுரைகள் .

மூன்றாம் பகுதி  ஐங்குருநூற்றுச்   செவ்வி 1கட்டுரை.

நான்காம் பகுதி கற்றறிந்தார் ஏத்தும் கலி 2  கட்டுரைகள்.

அய்ந்தாம்  பகுதி அகநாநூற்று மாண்பு 4 கட்டுரைகள் .

ஆறாம் பகுதி புற நாநூற்றுச்  சிறப்பு 9 கட்டுரைகள் .

ஏழாம்  பகுதி சங்கச்  சான்றோர்  தனித் திறன் 6 கட்டுரைகள் .

ஆக மொத்தம் 7 பகுதியாக 35 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .

கட்டுரை எப்படி ? எழுத வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமானவர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொன்ன கருத்துக்களை அவர்களின் பெயரோடு குறிப்பிட்டு கட்டுரை தொடங்குகின்றது .

' நற்றிணை  முதற்பாடலின் நயமும் நுட்பமும் ' முதல் கட்டுரையில் தமிழ் அறிஞர் தெ .பொ .மீ .கருத்து .

"திணை என்ற பெயரோடு நல் என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல் .நல்ல குறுந்தொகை என்று பிற்காலத்தார் பாடினார்கள் .ஆனால் ,தொகுத்த காலத்தே நல்  என்ற அடை இந்நூலுக்கு தான்      இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது ."

தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் .

இதில் உள்ள கட்டுரைகளை புதுகைத் தென்றல் இதழில் தனித் தனியாக படித்த போதும்  ,மொத்தமாக நூலாகப் படிக்கும் போது இலக்கிய விருந்தாக உள்ளது .பாராட்டுக்கள் . 

கட்டுரையின் முடிப்பும் முத்தாய்ப்பாக உள்ளன .பதச் சோறாக ஒன்று மட்டும் .

15 வது கட்டுரை. குறிஞ்சிக் கலி காட்டும்  தீராத விளையாட்டுப் பிள்ளை ! முடிப்பு பாருங்கள் . 

 "தலைவனின் இளமைக் குறும்பு ,தாயின் பாச உணர்வு ,தாயின் சாதுரியம் ஆகிய மூன்றையும் ஒரு முப்பரிமாண ஓவியம் போல திறம்படப் படம் பிடித்துக் காட்டுவதில் முழு வெற்றி பெற்றுள்ளது இக் கலித் தொகைப் பாடல் எனலாம் .  தேவையான இடங்களில் உலகப் பொது மறையான திருக்குறளையும் நூலில் பயன்படுத்தி உள்ளார்கள்."

பலாச்சுளை  பார்க்க வெளியில் கரடு முரடாகவும் உள்ள இனிப்பாகவும் இருக்கும் .அது போல படிக்க கடினமாக   உள்ள  சங்க இலக்கியத்தை நூல் ஆசிரியர் முனைவர் இரா .மோகன்
 அவர்களே உரித்து இனிக்கும் பலாச்சுளை வாங்கி உள்ளார்கள் .மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்து உள்ளார்கள் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வழி  வகுத்து உள்ளார்கள் . சங்க காலத்தில் தமிழர்கள் தமிழ் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை உணர்த்தும் நூல் இது .

வாசிக்கும் பழக்கம் குறைந்து ,பார்க்கும் பழக்கம் வளர்த்து விட்ட இயந்திரமயமான உலகில் நீண்ட நெடிய  கட்டுரைகள் வாசிக்க நேரமும் பொறுமையும் பலருக்கு கிடைப்பதில்லை .அனால் இந்த நூலில்  சின்னச் சின்ன கட்டுரைகளாக இருப்பதால்  வாசிக்க மிகவும் சுவையாக உள்ளன. 

மு .வ . வின் செல்லப்பிள்ளை  முனைவர் இரா .மோகன் அவர்கள் இலக்கிய இமயம் மு .வ . வின் வழியிலேயே திட்டமிட்டு எழுத்துப்  பணியை தேனீயை போல செய்து வருவதால் வெற்றி பெறுகிறார்கள் . 

கட்டுரைகள்  எடுப்பு தொடுப்பு முடிப்பு அனைத்தும் முத்தாய்ப்பு .படிக்க தித்திப்பு .நூல் ஆசிரியர்  சங்கஇலக்கிய பாடல் வரிகளை நல்ல ஓவியம் போல தீட்டி வாசகர் மனக் கண்ணில் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .சங்க இலக்கியத்தை சாமானியருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாவும் இனிமையாகவும் வடித்துள்ளார்கள் .

நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் நூல்களை தொடர்ந்து தரமாகவும் ,மிக நேர்த்தியாகவும் அச்சிட்டு குறைந்த விலையில் பதிப்பித்து வரும் பதிப்புத்  திலகம் வானதி இராமநாதன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .பதிப்புச் செம்மல்  மணிவாசகம் மெய்யப்பனர்  வழியில் பயணித்து தமிழ்த் தொண்டு செய்து வருகிறார்கள் .பாராட்டுக்கள் .


கருத்துகள்