ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் எழுத்தாளர் ,கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி!
ஆயிரம் ஹைக்கூ !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் விமர்சனம் எழுத்தாளர் ,கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி!
இருப்பு சவூதி அரேபியா !
முகாம் அமெரிக்கா !
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
தங்களது ' ஹைகூ ' நூலினைப் படித்தேன்: பல நூறு சிந்தனைகளை
மனதில் விதைத்தேன்!
வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கை போல் , உங்கள் 'ஆயிரம் ஹைகூ'க்கள் என் மனதில் எண்ணிலடங்கா எண்ணச் சிதறல்களை ஏற்படுத்தின... . அவற்றில் , எவற்றயெல்லாம் பிடித்து........, எடுத்து ......தொடுத்து .........'நூல் நயம் ' என்ற 'கவி மாலை ' கட்டுவது என்று ......மலைத்து .......ஒருவாறு முடித்து ......இன்று உங்கள் நூலுக்கு என் 'நூல் நயம்' ...........................
நூல் நயம் :
மனிதர்களை நேசிக்கவும் , வாசிக்கவும் தெரிந்த மனிதர் , இரா.இரவி அவர்கள் , பிரபஞ்சத்தைத் தமது கவிதைக் கண்களால் பார்த்துப் பரவசமடைந்தும் , புளகாங்கிதமடைந்தும் , அப்பிரபஞ்சத்தில் , சஞ்சரிக்கும் மனிதர்களைப் படித்தும் அவர்தம் இன்னபிற செயல்களைக் கண்டு , நகைத்தும் ,நையாண்டி , செய்தும் எழுதியிருக்கும் ஒவ்வொரு ஹை கூ கவிதையும் நம்மைப் பலவாறு சிந்திக்க வைப்பதோடு, நம்மை நேர்மைப் படுத்தவும் தவறவில்லை. அதேபோன்று, அவரது கவித்துவம் நமக்கு வழித்துணையாகவும் அமைந்திருக்கிறது.
வானம் இவருக்கு ஒரு பல்கலைக்கழகமாம் ; அதுவும் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாம் ! நீலவானை ரசித்தபடியே , உலக நடப்புகளை அலசுகிறார்.
"மரபுக் கவிதை
வானத்தில்
நிலவு."
" அய்யகோ!
வானத்திலும் சுரண்டலா?
பிறை நிலவு."
துளிர்ப்போம் என்று தானே மரங்களும் இலயுதிர்க்கின்றன !
மரங்களும் நம்பிக்கையோடு!
"இலைகள் உதிர்ந்தும்
நம்பிக்கையோடு மரம்
மழை வரும்>"
கவிஞரின் ரசனை அலாதியானது என்பதற்கு இதோ அவரது
ஹைகூ..................
" ரசிக்கச்
சலிக்காத
இயற்கை "
"உணர்த்திச் சென்றன
அலைகள்
கடலின் வனப்பை ."
இவரது தத்துவத்தேடல் ...........................நமக்கு இவரது நூலைப் போதிமரமாகத் தந்திருக்கிறது..
இவரது தேடல் ...........................நமக்குப் புதையல்!
ஒரு அருமையான சிந்தனைக் கவிதை...............
மனிதனுக்காக ..........................
" நாயும் பூனையும்
நட்பாக
மனிதன்?'
கவிஞர் இரா.இரவி அவர்கள் , காதல் நெஞ்சம் கொண்டவர் என்பதாலேயே .......................கவிதையையும் காதலிக்கமுடிகிறது,,,,,
காதலியையும் கவிதையாக்கிக் காதலிக்க முடிகிறது.................உலக நடப்புகளை, மனிதர்களை, மரங்களை வாசித்துச் செவ்வனே மயக்கம் கொள்ளமுடிகிறது...................இவற்றின் வெளிப்பாடாக .............பிறரை, அவர் வழியில் சிந்திக்கச் செய்ய முடிகிறது.....
மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய இவரது கவிதைகள் ........................
சக மனிதர்களின் இன்னல்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை இன்றே இப்பொழுதே செய்யமாட்டோமா என்ற ' உதவிக்கர உணர்வு ' ஏற்படுகிறதல்லவா?...........அதுதான்......................இந்த உந்துதலின் உபயம் தான் ஒரு கவிஞனின் வெற்றி எனலாம்.......மனிதனை மனிதனாக்கச் செய்யும் மகதத்துவச் செயல்!
"சக்கர வண்டியில் சென்றேனும்
வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டும் "
மாற்றுத்திறனாளிகளுக்கு,"
வாய்ப்பு வழங்கினால் வெற்றி பெறுவார்கள் மாற்றுத்திறனாளிகள் " என்பதை அறிந்து, படைத்திருக்கும், கவிஞரின் கவிதைகள் மிக அருமை..........................அனைத்துப் புலன்களும் முழுமையாகப் பெற்ற மனிதர்களைப் பலவாறு சிந்திக்கவும், செயல்படவும் தூண்டும் கவிதைகளாகும்.
பெண்களைப் பற்றியும், பெண்குழந்தைகளைப் பற்றியும் மிகவும் அக்கறையோடு எழுதியிருக்கும் கவிஞர் ...............ஆண்களின் பங்கு இவர்களின் முன்னேற்றத்திற்கு ...................எவ்வாறெல்லாம் உதவ வேண்டும்.............அல்லது உதவலாம் என்பதைக் கொஞ்சம் சிந்தக்கவேண்டும்; அடுத்த இவரது நூலில் இவை பற்றி எழுதவேண்டும் என்ற வேண்டுகோளை அன்புடன் இங்கே வைக்கிறேன்!.
இதில் .................
"பெண்கள் இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு இருக்கட்டும்
தருக மன ஒதுக்கீடு."
கொஞ்சம் மனம் ....அமைதிப்படுகிறது.............
கவிதையின் இலக்கணமாக................................
.
"மரபா? புதிதா?
என்பது முக்கியமல்ல
மனத்தைக் கவருவதே கவிதை ."
"மயிலிரகுத் தீண்டலென
மனதைத் தீண்டுவதே
நல்ல கவிதை"
அருமை!
பலரின் வாழ்க்கை சரியான போக்கில் இல்லாமைக்குக் காரணம்...............பலப்பல என்றாலும் ...............குறிப்பாக .....
கவிஞர் சொல்லும் காரணமே எனக்கொள்ளலாம் ..
"கிடைக்காததற்கு ஏங்குவது
கிடைத்ததை உணராதது.......
பலரின் வாழ்க்கை."
"அறிவுறுத்த வேண்டியுள்ளது
மனிதனாக வாழ
மனிதனை."
நல்ல கவிதைகள் ......
ஆயிரம் கவிதைகளைப் புனைந்த கவிஞரின் கவிதைகளை அணு அணுவாக ரசிக்க 'ஒரு நூறு நாட்களாவது தேவை ' ....ஒரு நூறு பக்கங்கள் எழுத.......................
எனக்குள் ஆசைதான் ...........................நானே எல்லாவற்றையும் ' நூல் நயத்தில் 'எழுதிவிட்டால்.................?
என் போன்ற வாசக எழுத்தாளர்களுக்கு அன்புடன் வழி விடுகிறேன்.
நண்பர் மேலும் பல அரிய , சிந்தனைக் கவிதைகளைத் தொடுக்க வாழ்த்துக்கள்!

கருத்துகள்
கருத்துரையிடுக