தமிழ் இன உணர்வில் வாழ்கிறார் இராமச்சந்திர ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !


தமிழ் இன உணர்வில் வாழ்கிறார் இராமச்சந்திர ஆதித்தனார் !
கவிஞர் இரா .இரவி !

ஆதித்தனார் இட்ட பத்திரிக்கைப் பாதையில்
அடி பிறழாமல்  பீடு நடை இட்டவர் !

புலிக்குப் பிறந்தது பூனையாகாது மெய்ப்பித்து
புலியாக நாளும் வலம்  வந்த நல்லவர் !

தமிழையும் தமிழரையும் இரு  விழியாக நேசித்து
தமிழருக்கும் தமிழுக்கும் தொண்டு செய்தவர் !

ஈழத்தமிழரின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்
ஈழத்த்தமிழ்ச் செய்திகளுக்கு முன்னுரிமை தந்தவர் !

முத்துக்குமாரின் மரணத்தை உடன் வெளியிட்டு
முதல்குரல் தந்து இன உணர்வு ஊட்டியவர் !

மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிவுடன் சிங்களரின்
மனித உரிமை மீறல் செய்தி வெளியிட்டவர் !

கோடிப்பணத்தைப் பெரிதாக எண்ணாமல்
கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றவர் !

பங்கஜதம்மாள் அவர்களின் கரம் பிடித்து
பண்புடன் வாழ்வாங்கு வாழ்ந்தவர் !

கண்ணன் ஆதித்தன் கதிரேசன் ஆதித்தன்
கண்ணான மகன்களை வளர்த்து உருவாக்கியவர் !

கீதா பிரேம்வெற்றி என்ற மகளை
கண்ணின் மணியாகக்  காத்து வளர்த்தவர் !

கண்மணி பெண்மணி தேவி என
மணியான இதழ்களை  நடத்கியவர் !

பெரிய அய்யா  என்று எல்லோராலும்
பாசத்தோடு அழைக்கைப் பட்டவர் !

மாலை  முரசு இதழில் பெயருக்கேற்றபடி
மாலையில்  செய்திகளை முரசாகக் கொட்டியவர் !

அ முதல் அக் வரை பத்திரிக்கைத் துறையில்
அனைத்தும் அறிந்து வைத்து இருந்தவர் !

பத்திரிக்கை அதிபராக  மட்டும் இருக்காமல்
பத்திரிக்கை ஆசிரியராகவும்  திகழ்ந்தவர் !

தமிழ் அறிஞர்களை  இனம் கண்டு
தம் பத்திரிக்கைகளில் அறிமுகம் செய்தவர் !

ஆதித்தனார் தொடங்கிய முத்தமிழ்ப் பேரவையின்
அற்புதத்தலைவராக இருந்து தமிழ்ப்பணி  செய்தவர் !

சினம் கொள்ளாத சிங்கமாக வாழ்ந்தவர்
சீரான வாழ்க்கையின் அங்கமாக வாழ்ந்தவர் !

பத்திரிக்கை உலகில் மன்னராக வாழ்ந்தவர்
பத்திரிக்கை தர்மம் கட்டிக் காத்தவர் !

உண்மையாய் ஊருக்கு  உழைக்கும் நல்லவர்களுக்கு 
ஊக்கம் தந்து செய்திகள் வெளியிட்டவர் !

உடலால் உலகை விட்டு மறைந்தபோதும் தமிழ்
உணர்வால் உலகத்தமிழர்களின்  உள்ளங்களில் வாழ்கிறார் 

 

கருத்துகள்