பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

பலமொழிகளில் இருந்து  ஹைக்கூ  ( சென்றியு )   
கவிஞர் இரா .இரவி !

கயவனுக்குள்ளும் 
கண்ணியவான் இருப்பான் 
பொய்த்தது சிங்களனிடம் !
கொலைக்கே அஞ்சாதவன் 

பழிக்கு அஞ்சுவானா ?
சிங்களன் ! 

அன்புக்குரியவன்  தவறுகள் 
கண்களை மறைக்கும் 
இலங்கையிடம் இந்தியா !

அயோக்கியனை அச்சுறத்த 
அவனது மனமே போதும் 
நடுக்கத்தில்  கொடூரன் !

திருடனுக்கு தேள் கொட்டியது 
கத்த  முடியாமல் 
சிங்களன் !

புலி இல்லாத இடத்தில 
பூனைக்குக் கொண்டாட்டம் 
சிங்களன் !

ஆகாசமே துணை 
அகதிக்கு 
புலம்பெயர்ந்தோர் !

கருத்துகள்