வாசகர் மடல் ! கவிஞர் இரா .இரவி !
.
தி இந்து தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் .
நாளிதழ் சிறப்பாக வருகின்றது ..அறிவார்ந்த பல கட்டுரைகள் வருகின்றன .பாராட்டுக்கள் .மூளைக்காரன் பேட்டை பகுதியில் ஆரம்பத்தில் பொது அறிவுக்கு பயன்படும் விதத்தில் வந்தது .பின் ஆங்கிலச் சொற்களை விடையாக வரும்படி வந்தது .ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கும் படி தங்களுக்கு மடல் அனுப்பினேன் .தற்போது அஜித் ,விஜயகாந்த் ,சிம்ரன் இவர்கள் நடித்த படங்களின் பெயர்கள் குறித்த கேள்விகள் வந்தது .வருங்காலங்களில் திரைப்படம் தவிர்த்து பொது அறிவு சமந்தமாக மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் கேள்விகள் அனுப்பும் படி வாசகர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள் .தரமான அறிவார்ந்த கேள்விகளை மட்டும் பிரசுரம் செய்யுங்கள் .திரைப்பட செய்தி வெளியிடும் பக்கத்தில் கவர்ச்சி படங்களை தவிர்த்திடுங்கள் .குடும்பத்தில் அனைவரும் படிக்கும் நாளிதழில் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html