உலக வறுமை ஒழிப்பு நாள் ! கவிஞர் இரா .இரவி !

உலக வறுமை ஒழிப்பு நாள் ! கவிஞர் இரா .இரவி !

வறுமை இன்னும் ஒழிக்கப் படவில்லை !
வறுமை கொடிது கொடிதிலும் கொடிது !

உணவு உடை உறைவிடம் பலருக்கு  
உலகில் இன்னும் கிடைக்கவிலை !

வல்லரசு என மார் தட்டும் நாட்டிலும் 
வறுமை  இன்னும் ஒழிக்கப் படவில்லை !

சோமாலியா மக்களின் சோகத்தை 
சொல்லில்  அடக்கிட முடியாது !

மனிதநேயம் இன்னும் மலரவில்லை !
மனிதநேயம் மலர்ந்தால் ஒழியும்  வறுமை !

ஊழல்  ஒழிந்தால் ஒழியும்  வறுமை !
ஊழல் அழிந்தால் அழியும   வறுமை !

பேராசை அகன்றால் அகலும் வறுமை !
பணத்தாசை விடுத்தால் விலகும் வறுமை !
.
அணுவிற்கும் ஆயுதத்திற்கும் செலவிடுவதை 
அணு அளவாவது வறுமை ஒழிக்க செலவிடுங்கள் !

உலகம் முழுவதும் மலரட்டும் பொதுவுடைமை !
உலகம் முழுவதும் ஒழியட்டும் தனிவுடைமை !

குளுகுளு   அறையில்  கோடிகளில்  சிலர் !
கொட்டும் மழையில் வீதிகளில் பலர் !

பணக்காரன் ஏழை என்ற சொற்களை ஒழிப்போம் !
பண்பாளன் நல்லவன் என்றே ஆக்குவோம் ! 

பசிப் போக்க வழியின்றி நாளும் 
உயிர் போக்கும் செய்திகள் படிக்கிறோம் !

வறுமையின் கொடுமையால் தற்கொலைகள் 
வழக்கமாக நடப்பது நாட்டுக்கு அவமானம் !

நாட்டில் வன்முறைகள் நாள் தோறும்  
நிகழக்  காரணம்  கொடிய  வறுமையே !

வறுமையை ஒழித்தால்  வன்முறை ஒழியும் !
வறுமையை ஒழித்தால்  வேதனை ஒழியும்  !

ஒரு வேளை மட்டும் உண்போர் உண்டு !
இரு  வேளை மட்டும் உண்போர் உண்டு !

மூன்று  வேளை உண்போர் நினையுங்கள் !
முற்றிலும் வறுமை ஒழிக்க வாருங்கள் ! 
 
இருப்பதை எல்லோருக்கும் பொதுவாக்குவோம் !
இல்லாதவர் இல்லை என்ற நிலையாக்குவோம்  !

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு !
அளவிற்கு மிஞ்சிய பணமும் நஞ்சு !

கோடிகள் கொள்ளையரை  சிறைபிடிப்போம் !
கோடித்துணி இல்லாதவருக்கு பகிர்ந்தளிப்போம் !

கருத்துகள்

  1. கோடி கள்..கொள்ளை அடித்து?சிறை சென்று வந்த சமுதாய திருடர்களை..அன்னையாய்..தலைவனாய்..வணங்கும்..அவலநிலை.. மாறினால..வறுமை..வெறுமையாகும் நாட்டிலே!?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக