முளை கட்டிய சொற்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 55.
தொலைபேசி 044- 26359906.
நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .அட்டை வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களின் இயற்பெயர் ஜோ .ஏசுதாஸ் இவரது முதல் நூல் கண்ணீர் வாசனை .இரண்டாம் நூல் காதல் திணை .இந்த நூல் மூன்றாம் நூல் .முத்திரைப் பதிக்கும் நூலாக வந்துள்ளது .முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை மிக நன்று .கவிதைகளைப் பிரசுரம் செய்த இதழ்களுக்கும் , நண்பர்களுக்கும் மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் . மண் மணக்கும் கவிதை என்பதைப் பறை சாற்றும் விதமாக முதல் கவிதையே மண் வாசனை வீசும் கவிதை. கவிதையின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .
பறக்கும் நிலம் !
தரையிரங்கி
சேற்றில் இரைதேடி
பறந்து செல்லும் பறவையின் காலில்
ஒட்டியிருக்கிறது
சிறிது நிலம் !
படிப்பினை !
தனது கன்று இறந்து போனதை நினைத்து
புள் தின்னாமல் பசு !
தனது குட்டி விற்கப்பட்டதை நினைத்து
கத்துகிறது ஆடு !
நோய்வாய்ப்பட்ட நாய்
படுத்திருக்கிறது சோகத்தில் !
கூடு கலைத்து தன் குஞ்சுகள்
திருடப்பட்டதைப் பார்த்து
மார்பிலடித்துக் கொண்டு புலம்புகிறது
பறவை !
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட
வலி வேதனை கவலை உண்டு .
ஆனால் அவை
மனிதனைப் போல்
தற்கொலை செய்து கொள்வதில்லை !
மனிதா விழுந்தால் வீழ்ந்து விடாதே .எழுந்து வா! என்பதை உணர்த்தும் விதமாக .உலகப் பொதுமறையான திருக்குறளான முயற்சி திருவினையாக்கும் என்பதை வழி மொழிந்து எழுதியுள்ள கவிதை நன்று .
முளைத்தல் !
கிளை இடுக்கில் சுவரில்
தொட்டியில் நிலத்தில் இப்படி
எங்கே விழுந்தாலும் முளைத்து
கற்றுக் கொடுக்கின்றன
வாழ்க்கைத் தத்துவத்தை
விதைகள் !
தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் விதித்து மக்கள் ஆங்கில மோகம் போலவே ஆங்கில மருத்துவ மோகம் பிடித்து அலைகிறார்கள் .அதன் மருந்து விலைகளோ மயக்கம் தரும் விதமாக மிக உயர்வாக உள்ளன .நாட்டு நடப்பை உணர்த்தும் கவிதை .
வலி !
வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டால்
அதன் விலை தருகிறது
நெஞ்சு வழியை ...
புதுக் கவிதை ஹைக்கூ கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .
உள்ளத்து உணர்வு கவிதை .மனதில் பட்டதை ,கண்ணில் கண்டதை, உணர்ந்ததை கவிதையாக்கி உள்ளார் .பெரியவர்களிடம் உள்ள கோபம் குழந்தைகளிடம் இல்லை என்ற உண்மையை உணர்த்திடும் கவிதை .
தனிக்குடித்தனம்
போகும்போது கூட
டாட்டா காட்டுகிறது குழந்தை !
உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் இவற்றின் விளைவு விடுதலை பெறும் போது ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் இன்று ஒரு டாலரின் மதிப்பு அறுபதுக்கு மேல் .இதுதான் அரசியல்வாதிகள் செய்த வேதனையான சாதனை .நமது ரூபாய் மதிப்பு மட்டுமல்ல நாட்டின் மதிப்பும் தாழ்ந்து விட்டது .பண்பாடு சிதைந்து விட்டது .வாழ்க்கை முறை மாறி விட்டது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
பின்னிரவு நுனியில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
சேவல் கூவியது அலைபேசியில் !
சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஹைக்கூ நன்று .
சிலுவை மரம் தருகிறது
இயேசுவையும் மரம்தான்
தருகிறது !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அருமை
பதிலளிநீக்கு