பலமொழிகளில் இருந்து ஹைக்கூ ( சென்றியு )
கவிஞர் இரா .இரவி !
கிட்டும் கனி
வெற்றி !
பிடித்து வைத்தனர்
காற்றை
பந்து !
நிரந்தரமன்று
ஆடம்பர வாழ்க்கை
வானவில் !
பருந்து பசித்தாலும்
தானியம் தின்னாது
கொள்கையாளன் !
மூச்சு முட்ட
உண்பது தீங்கு
நிற்கும் மூச்சு !
வானத்திற்கும்
வாயுண்டு பேசியது
இடி !
இரண்டும்
கசக்கும்
எட்டிக்காய் எதிர்க்கட்சி !
மறைக்கப்பட்ட அன்பு
வெளிப்படும் விடும்
அவள் முகம் !
மலர்களைக் காட்டிலும்
சோறே சிறந்தது
பசித்தவனுக்கு !
பித்தனாக்கும்
திரவம்
மது !
முள்ளில் பூத்த
ரோஜா
குடிகாரன் மனைவி !
சேற்றில் மலர்ந்த
செந்தாமரை
குடிகாரன் மகள் !
கருத்துகள்
கருத்துரையிடுக