ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !

மற்ற ஊர்களில் இனிப்பு வாங்கினால் !
காரம் இலவசம் தரலாம் !

மதுரையில் மட்டும்தான் உங்களுக்கு  !
காரம் வாங்கினால் இனிப்பு இலவசம் !

இதயம் வரை இதம் தரும் ஜெகர்தண்டா !
இனிக்கும் சுவைமிகு பருத்திப்பால் !

ஊரே மணக்கும் குண்டு மல்லி !
மல்லிகைப்பூ இட்லி மணக்கும் சட்னி !

தனி நெய்யால் செய்திட்ட கோதுமை அல்வா !
தன்னிகரில்லா சுவை மிகுந்த இனிப்புகள் !

சைவ உணவிற்கான உணவகங்கள்  உண்டு !
அசைவ உணவிற்கான உணவகங்கள்  உண்டு !

விருதுநகர் புரோட்டா மதுரையில் உண்டு !
விதவிதமான உணவு வகைகள் உண்டு !

இட்லிக்கு மட்டும் தனிக்கடை உண்டு !
தோசைகளுக்கு மட்டுமே  தனிக்கடை உண்டு !

நடுநிசியிலும் கிடைக்கும் தூங்கா  நகரம் !
நடுநாயகமாக என்றும் விளங்கும் நகரம் !

அன்று சிலப்பதிகாரம் கண்ணகி காலம் தொடங்கி  !
இன்று கணினி அலைபேசி காலம் வரை மதுரையில் !

அல்லங்காடி  இரவுக்கடைகள் உண்டு ! .
அள்ள  அள்ளக்  குறையாத வளங்களும் உண்டு !

உணவுகளுக்கு மட்டுமல்ல எங்கள் மதுரை !
உணர்வுகளுக்கும் சிறந்த ஊர் எங்கள் மதுரை !

பாசக்கார மனிதர்கள் வாழும் மதுரை !
நேசத்திற்காக உயிரும் தரும் மதுரை !

வான் உயர்ந்த கோபுரங்கள் உள்ள மதுரை !
வான் புகழ் வள்ளுவம் தந்த மதுரை !

கடலில் கலக்காத வைகை ஓடும் மதுரை !
களங்கமற்ற மனிதர்கள் வாழும் மதுரை !

திருமலை மன்னர் அரண்மனை உள்ள மதுரை !
திரும்பிய பக்கமெல்லாம் கோயில் உள்ள மதுரை !

மாரியம்மன் தெப்பக்குளம்  உள்ள மதுரை !
மைய மண்டபங்கள் பல உள்ள மதுரை !

காந்தியடிகளை   அரையாடையாக்கிய மதுரை !
காந்தியடிகளின்  இறுதியாடை உள்ள மதுரை !

சதுரம் சதுரமாக வடிவமைத்த மதுரை !
சந்தோசத்திற்குப்  பஞ்சமில்லா  மதுரை !


கண்டவர்கள் யாவரும்  விரும்பிடும் மதுரை !
கழுதையும் கூட மிகவும் விரும்பிடும் மதுரை !

வந்தாரை வரவேற்று வாழ்விக்கும் மதுரை !
வந்து சென்றோரை  நினைக்க வைக்கும் மதுரை !

அரசியல் வாழ்வு பலருக்குத் தந்த மதுரை !
ஆள்வோரை நிர்ணயம் செய்திடும் மதுரை !

திரைப்படக்  கலைஞர்களைத் தந்த மதுரை !
திரைப்படத்தின் தீர்ப்பை எழுதிடும் மதுரை !

பட்டிமன்ற நடுவர்களைத் தந்த மதுரை !
பண்பாட்டைப்  பறைசாற்றிடும் தங்க மதுரை !

பள்ளிகளும் கல்லூரிகளும் நிறைந்த மதுரை !
பள்ளிவாசல்களும் தேவாலயங்களும்  உள்ள மதுரை !

மண் மணக்கும் சிறந்த ஊர் மதுரை !
மறக்க முடியாத சிறந்த ஊர் மதுரை !

சித்திரைத் திருவிழா நிகழும் மதுரை !
முத்திரைப் பதிக்கும் முத்தமிழ்  மதுரை !

சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரை !
சிங்கம் நிகர் மக்கள் வாழும் மதுரை !

ஈடு இணையற்ற எங்கள்  மதுரை !
நாடு போற்றும் நல்ல  மதுரை !

.

கருத்துகள்