ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   !   ( சென்றியு  )  கவிஞர் இரா .இரவி !

மண்டபங்களை விட 
காவல் நிலையங்களில் அதிகம் 
திருமணம் !

 

திருந்துங்கள் 
கௌரவம் இல்லை
கௌரவக்கொலை  !

ஆடியவர் அடங்கினார் 
மற்றவர்கள் ஆடினர் 
பிணத்தின் முன் !

புது மொழி 
கற்றது கணினி அளவு 
கல்லாதது இணைய  அளவு !

தந்தது 
தினமும் வலி 
தீபாவளிக்கடன் !

விவசாய நாட்டில் 
காட்சிப்பொருளானது 
ஏர் கலப்பை !

பரவும்  கொடிய நோய்  
மருந்து காணுங்கள் 
தமிங்கிலம் !

பெருகப் பெருக 
பெருகியது வன்முறை 
மதுக்கடை !

அன்று மது விலக்கு 
இன்று மதுக்கடைக்கு விளக்கு 
குடிமகன்கள் பெருக்கு !  
 
மன இருள் 
அகற்றும் விளக்கு 
திருக்குறள் !

தெருவுக்குத் தெரு 
மாநிலத்திற்கு ,மாநிலம் 
தண்ணீர் சண்டை !

விடுவதில்லை 
ஒலிவாங்கி கிடைத்தால் 
அரசியல்வாதிகள் !

ஒழிப்பதாகச் சொல்லி வந்து 
கொழித்து விடுகின்றனர் 
ஊழல் !

பேராசை பெரும் நஷ்டம் 
சிறையின் அறையில் 
அரசியல் தலைவர் !

மாசாகும்  
மனிதன் சென்றால் 
விட்டு விடுங்கள் செவ்வாயை !

சொன்னது கருத்து   
பேசியது ஓவியம் 
ஓவியர் உள்ளம் !

ஆண் படித்தால் அவனுக்கு 
பெண் படித்தால் குடும்பத்திற்கு 
நன்மை ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்