ஹைக்கூ ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்ரியு  ) கவிஞர் இரா .இரவி !

விரும்பி உண்ணும் 
கசக்கும் வேப்பிலை 
ஒட்டகம் !

உயிர் வளர்க்கும் 
ரகசியம் 
நடைப்பயணம் !

வருந்தியது மரம் 
உதிர்ந்த இலையின்
காயத்திற்கு !

நூற்றாண்டுகள்  வாழும் 
வேட்டாமாயில் விட்டால் 
மரம் !

பயன்படுத்த வைத்தவர் 
பகுத்தறிவை 
தந்தை பெரியார்  !

படிக்காவிட்டாலும் 
படிப்பாளிகளை உருவாக்கியவர் 
கல்வி வள்ளல்  காமராசர் !

அகிலம் வியந்தது 
அறிவாற்றல் கண்டு 
அறிஞர் அண்ணா !

இறந்தும் வாழ்கிறார் 
மின்சாரத்தில் 
எடிசன் !

தோல்விகளுக்கு
தோல்வி தந்தவர் 
அபிரகாம் லிங்கன் !

தன்னை உருக்கி 
மற்ற உயிர் காத்தவர் 
மேரி கியூரி !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்