படித்ததில் பிடித்தது !
எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினால் தமிழ் வாழும் !
இல்லையேல் தமிழ் வீழும் !
சொல்லெடுக்க சொல்லிக்கொடுத்தது,
சோரெடுத்து தின்றுபழகும்முன்னே
மரநிழலில் விரல்பிடித்து எழுதிபார்த்தது,
என் முகவடிவம் நானறியும்முன்னே
மீசைக்காரனவன்
முகம் மனதில் பதியச்செய்தது,
ஒரு நாளைக்கு
அரைமணி தான் என்றபோதும்
எப்போது வருவார் ஐயா
என காத்திருக்கச்செய்தது,
சேர சோழ பாண்டியரேல்லாம்
பார்விட்டுப்போனபின்னும்
நமைவிட்டுப்போகாமலிருக்கச்சேய்தது,
ஏர்கலப்பை பிடிக்கும்போதும்
போர்களத்தை பிடிக்கும்போதும்
இதயத்தில் துடிப்பது,
அம்மா என நான் சொல்கையிலும்
அப்பாவென என் மகன் சொல்கையிலும்
என்றுமே வாழும் தமிழ் ,வீழாது தமிழ்.
கருத்துகள்
கருத்துரையிடுக