தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !
 
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை  வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக  இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம்  நாடகம் .

பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக  எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட்  சுந்தராம்பாள் பற்றிய  நடக்க தகவல்கள் உள்ளன .

தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும்  ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .

யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ்  வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு 
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .

பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின்  உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத  கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .

இலங்கையில் தமிழக நாடகக்  கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க  முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது . 

தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு  பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு  கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத்   தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்  முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .

1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த  அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன.  அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .

நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை ,  தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல்   நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .

இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள் 


.

கருத்துகள்