காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
காவியக் கவிஞர் வாலியே !
உந்தன் மரணம் எங்களுக்கு வலியே !
மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள்
மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !
வாலிப வாலி என்பது உண்மை !
வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !
புதியவானம் புதிய பூமி என்று எழுதி !
புத்துணர்வை விதைத்தவர் வாலி !
'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி !
எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !
கண் போன போக்கிலே கால் போகலாமா ?
காளையரை நெறிப் படுத்திய வாலி !
தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி !
துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !
காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் !
காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி !
அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை !
ஓவியர் மாலிபோல வர வாலி என்று வைத்தார் பாபு !
கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி !
திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்தவாலி!
திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி !
மயக்கமா! கலக்கமா ! கவியரசு பாடல் கேட்டு வாலி!
மறுபரிசீலனை செய்து சென்னை தங்கிய வாலி !
சொல் விளையாட்டில் வார்த்தைச் சித்தர் வாலி !
சொக்க வைக்கும் பாடல்களின் ஆசிரியர் வாலி !
பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்த வாலி !
பல்லாண்டுகளாய் திரையில் நிலைத்த நின்ற வாலி !
வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி !
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம் .ஜி .ஆர் !
உன் பெயர் பெயர் இடம் பெறாது என்றதும் வாலி !
உலகம் சுற்றும் பன் என்று பெயர் மாற்றவேண்டும் !
உங்களுக்குச் சம்மதமா என்று கேட்ட வாலி !
உடன் சிரித்து ரசித்த உயர்ந்த மனிதர் எம் .ஜி .ஆர் .!
எம் .ஜி .ஆருக்கு நான் ஆணையிட்டால் என்று எழுதி!
எம் .ஜி.ஆரை ஆணையிடும் பதவிக்கு வர வைத்த வாலி!
மல்லிகை என் மன்னன மயங்கும் என்று எழுதி !
மதுரை மல்லிக்கு மங்காப் புகழ் சேர்த்த வாலி !
தனி ஈழத்திற்காகவும் கவிதைகள் வடித்த வாலி !
தனிக் கவிதைகளிலும் முத்திரைப் பதித்த வாலி !
பாடல் கவிதை கதை கட்டுரை வடித்த கவிஞர் வாலி !
படைப்புகளில் என்றும் வாழ்வார் மரணம் இல்லை !
ஓய்வறியா உழைப்பாளி உரத்த சிந்தனையாளர் வாலி !
ஒப்பற்ற கவிதைளை வடித்துத் தந்தவர் வாலி !
கவியரங்கங்களில் தலைமை வகித்தவர் வாலி !
கை தட்டல்களைப் பரிசாகப் பெற்றவர் வாலி !
கண்ணதாசனை தாடி இல்லா தாகூர் என்றார் வாலி !
கற்பனைக் கவியால் தாடி உள்ள தாகூர் ஆனார் வாலி !
கண்ணதாசனை மீசை இல்லா பாரதி என்றார் வாலி !
கற்க்கண்டுக் கவியால் மீசை உள்ள பாரதியானார்வாலி!
படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! மரணம் இல்லை ! மரணம் இல்லை !
வாலி (கவிஞர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் வாலி | |
---|---|
பிறப்பு | டி. எஸ். ரங்கராஜன் அக்டோபர் 29, 1931(அகவை 81) திருவரங்கம், திருச்சி,தமிழ்நா |
இறப்பு | சூலை 18 2013 (அகவை 81) சென்னை |
பணி | கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் |
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பொருளடக்கம்
[மறை]பிறப்பும் வளர்ப்பும்[தொகு]
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர்கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதை கள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .
வாலி இறப்பு[தொகு]
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.[2]
வாலி பெயர்க்காரணம்[தொகு]
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில்ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
எழுதிய நூல்கள்[தொகு]
சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்[1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்கு நர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
வாலி எழுதிய சில பாடல்கள்[தொகு]
பாடல் | படம் | வருடம் |
---|---|---|
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " | ஆயிரத்தில் ஒருவன் | 1968 |
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " | தீர்க்க சுமங்கலி | 1974 |
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " | இரு மலர்கள் | 1967 |
நான் ஆணையிட்டால் | எங்க வீட்டு பிள்ளை | (1965) |
காற்று வாங்க போனேன் - | கலங்கரை விளக்கம் | (1965) |
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- | சந்திரோதயம் | (1966) |
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - | எதிர்நீச்சல் | (1968) |
இறைவா உன் மாளிகையில்- | ஒளிவிளக்கு | (1968) |
அந்த நாள் ஞாபகம் - | உயர்ந்த மனிதன் | (1968) |
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- | இருகோடுகள் | (1969) |
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி- | சுபதினம் | (1969) |
மதுரையில் பறந்த மீன்கொடியை- | பூவா தலையா | (1969) |
விருதுகள்[தொகு]
- பத்மஸ்ரீ விருது-2007
- 1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[3].
- 1970 – எங்கள் தங்கம்
- 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
- 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
- 1990 – கேளடி கண்மணி
- 2008 – தசாவதாரம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.01.1 "Elevan Padma awards announced for Tamil Nadu". தி இந்து. 28 January 2007. பார்த்த நாள்: 14 June 2012.
- ↑மருத்துவமனையில் கவிஞர் வாலி காலமானார்
- ↑Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Fim History and Its Achievements). Sivagami Publications. p. 738.
கருத்துகள்
கருத்துரையிடுக