ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  (  சென்றியு  )  கவிஞர் இரா .இரவி !

பகலிலும் ஒளிரும் 
ஒளி  விளக்கு 
புத்தகம் !



உற்ற துணை 
இணையில்லா இணை
புத்தகம் !

தனிமை நீக்கும் 
தன்னலம் போக்கும் 
புத்தகம் !

அறிவுப் புகட்டும் 
அறியாமை  அகற்றும் 
புத்தகம் !

நம்மோடு பேசும் 
உயர்திணை  
புத்தகம் !

மறைந்தவர்களை 
உயிர்ப்பிக்கும் 
புத்தகம் !

திருப்புவதால் 
திருப்புமுனை 
புத்தகம் !

கேள்வி  இல்லை 
தினமும் ஏற்றினாலும்
பெட்ரோல் !

வீழ்ந்தது   
ரூபாயின்  மதிப்பும் 
இந்தியனின்  மதிப்பும் !

விழுந்தபோதும் 
விழாமல் பறந்தது  
புறா !

ஆசிரியர் 
யாவரும் 
நல்லாசிரியரே !

நாமக்கல்லில் பிறந்த 
கவிதைக்கல் மலை  
இராமலிங்கம் !

கருத்துகள்