ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !

உளியால் செதுக்குமுன் 
மனத்தால் செதுக்கினான் 
சிற்பி !

அழியாமல் இருந்தது 
நீரில் வரைந்த  ஓவியம் 
புகைப்படம் !

ஒளிருவதில்லை 
தீட்டும்முன் 
வைரம் !

வருந்துவதில்லை 
நிறத்திற்காக  
காகம் !

முட்டையில் இருந்து 
கோழி மட்டுமல்ல 
சேவலும் வரும்  !

சின்ன மீன் போட்டு 
சுறா மீன் பிடிப்பு 
அன்பளிப்பு !

கிணறுதான் 
கடல் 
தவளைக்கு  !

உதட்டில் தேன் 
உள்ளத்தில் தேள் 
அரசியல் !

நிறைய கேள் பார் 
குறைவாகப் பேசு 
ஒன்றுதான் வாய் !

நீச்சுத் தெரியாமலே 
மிதந்தது 
குளத்தில் நிலா !  

குடிகாரனுக்கு எதிரி 
வெளியில் இல்லை உள்ளே 
நாக்கு !

காண்பதும் பொய் 
சுற்றுவதாகத் தோன்றும் 
சுற்றாத சூரியன் !

எரிந்தது விளக்கு 
எண்ணை திரி இன்றி 
மின்ம்னி !

ஒரு எலும்பு இல்லை 
பல நரம்பு உண்டு 
நாக்கு !

உணர்த்தியது 
நிலையாமையை 
உதிர்ந்த இலை !  

கருத்துகள்