பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பற ...  பற ...  

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
 
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30.
தொலைபேசி 9841436213.

இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால்  இவரோ  படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை தனது மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .புகையிலை ஒழிப்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .சமுதாய ஈடுபாடு உள்ளவர் .

பற ...  பற ... என்ற நூலின் தலைப்பே பறவைகளை நினைவூட்டி விடுகின்றது .நூல் முழுவதும் பறவைகள் ! பறவைகள்  ! பறவைகள் !
பற்றிய ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகனுக்கு சிறகுகள்  முளைக்க வைக்கின்றன .அட்டைப்பட வடிவமைப்பு .உள்  அச்சு,பறவைகள்  புகைப்படங்கள் என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக்கள் .மின்னல் கலைக்கூடத்தின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ளது . 

இந்த நூலை இலக்கிய பறவைகளின் இனிய வேடந்தாங்கலாய் ஊஉக்கமலிது உற்சாகப்படுத்தும் கவிஞர் சீனி .இரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் திருக்குறளில் ஆழ்ந்த புலமை உள்ளவர் என்பதால் மறக்காமல் நண்பர்கள் கவிஞர்கள் பெயர் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்துள்ளார் .என் பெயரும் உள்ளது .நூல் ஆசிரியருக்கு இது மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது .முத்திரை பதிக்கும்  நூலாக வந்துள்ளது . பாராட்டுக்கள் .

பறவைகளை என்றும் நேசிப்போம் !
உயிர்வதை வேண்டாம் யோசிப்போம் !

கல்வெட்டு  வரிகள் நூல் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன பறவை நேசம் விதைக்கின்றது .

தோட்ட  உரிமையாளர்கள் என்று சொல்லி பட்டா வைத்துக் கொண்டு மார் தட்டும் முதலாளிகளின் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு ஹைக்கூ .

பறந்து வந்து இறங்கும் 
தோட்ட  உரிமையாளர்கள் 
பறவைக் கூட்டம் !

மனிதர்களில் பலர் பிறரை நேசிப்பதில்லை .இன்னும் சிலர் தன்னையே நேசிப்பது இல்லை .தன்னையே விரும்பாத மனிதர்களும் பூமியில்  உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .மிக நன்று. காட்சிப் படுத்தும் ஹைக்கூ .

தன்னையே  காதலிக்கும் 
ஒற்றைச் சிட்டுக்குருவி 
கண்ணாடியில் அலகுகொத்தி !  

துன்பம் தந்தவனுக்கும் இன்பம் தரும் அகிம்சை வாதியாக கிளியை சித்தரிக்கும் ஹைக்கூ .

கூண்டில் அடைத்தவனுக்கு  
கூழ்  ஊற்றுகிறது  
சோதிடக் கிளி !

நன்மை செய்யும் பறவைகளுக்கு தீமை செய்யும் மனிதர்களை  சாடும் விதமாக .புத்திப்  புகட்டும் விதமாக உள்ள ஹைக்கூ .பாசமாக வளர்த்த சேவலும் விருந்தாடி வந்து விட்டால் விருந்தாகி விடும் அவலம் சுட்டும் ஹைக்கூ . 

அதிகாலை ஐந்து மணி 
கூவி  எழுப்பிய சேவல் 
குழம்பில் கொதித்தது !

உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு இந்தியா .இந்த அஞ்சல் துறை க்கு முன்னோடியான பறவையை நினைவூட்டும் ஹைக்கூ .

மனித வரலாற்றில் 
முதல் தபால்காரன் 
தூதுப்புறா !    

 பறவைகளை ஆய்வு செய்து என்ன பறவை என்ன நிறம் .என்ன குரல். என்ன செய்யும் இப்படி பல தகவல்களை ஹைக்கூ கவிதை மூலம்  எழுதியது சிறப்பு .பெற்ற அன்னையை  மறந்து விடும் அவலம் சாடும் ஹைக்கூ .

விரட்டப்பட்ட அம்மா 
வழித்துணையாய்  வந்தமரும் 
தோளில்  புறா !

தொன்மை தகவலும் ஹைக்கூ கவிதையில் பதிவாகி உள்ளது .

மை  தொட்டு எழுத 
முதலில் உதவியது 
சிறகு !

அட்டை முதல் அட்டை வரை பறவைகள் பற்றிய பரவச ஹைக்கூ கவிதைகள் .பறவை பாசம் பறை சாற்றும் விதமாக உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்காக எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பயன்  பெறுங்கள் .மனித நேயம் தாண்டி பறவை நேயம் கூறும் நூல் . நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


கருத்துகள்

கருத்துரையிடுக