மதுரையில் உலக சுற்றுலா தின விழா !
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் மதுரையில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டது .மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கல்லூரி மாணவ மாணவியருக்கு சுற்றிக் காட்டும் விதமாக பாரம்பரிய நடைப்பயணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள் . தானம் அறக்கட்டளை திரு பாரதி மற்றும் வழிகாட்டிகள் கலந்து கொண்டனர் .திருப்புவனம் கருப்பையா குழுவினரின் மேல தாள இசையுடன் ஊர்வலம் வந்தது .
மதுரையில் உள்ள முன்னணி வழிகாட்டிகள் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை விரிவாக எடுத்து இயம்பினர் .ஊர்வலம் மீனாட்சி பூங்காவில் இருந்து தொடங்கி மீனாட்சி கோவில் வழியாக நகரா மண்டபம் ,புது மண்டபம் ,விட்டவாசல்,தேர்கள்,விளக்குத்தூண் ,
பத்துத்தூண்,வழியாக சென்று திருமலை மன்னர் அரண்மனை சென்று சேர்ந்தது .தொல்லியல் மண்டல உதவி இயக்குனர் கணேசன் அரண்மனை வரலாறு கூறினார் .மாவட்ட சுற்றுலா அலுவலர்
க .தர்மராஜ் தலைமையில் உதவி சுற்றுலா அலுவலர்கள்
இரா .இரவி ,சிவகுமார் ,உமாதேவி , ஜெயந்தி ,பணியாளர்கள் பி .ஜே .ஆண்டனி ,நீலமேகம் ,தேவநாதன் ,மாரிமுத்து ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர் .

கருத்துகள்
கருத்துரையிடுக